பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியை புலிகளின் சர்வதேச தொடர்பாளர் எனக் கூறப்படும் கே.பி அறிவித்ததைத் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் அவ்வியக்கத்தினரிடம் பாரிய மோதல்கள் வெடித்துள்ளது. இவ்வாரத்தை துக்கவாரமாக கடைகளை அடைத்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துமாறு புலிகளின் ஒரு தரப்பினர் வேண்டுகோள்விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் பிரபாகரன் இறந்து விட்டதாக ஊடகங்களுக்கு அறிவித்த பத்மநாதன் மாபெரும் துரோகி என துண்டுப்பிரசுரங்கள் பிராண்ஸ் நாடெங்கும் வினியோகிக்கப்பட்டும், ஒட்டப்பட்டும் உள்ளது. அதே நேரம் கே.பி பெரிய சக்தி ஒன்றுக்கு விலை போய் உள்ளதாக தெரிவித்துவரும் லண்டனில் உள்ள புலிகளின் ஒரு பிரிவினர் எவரும் கடைகளை பூட்டவோ அஞ்சலிகளைச் செலுத்தவோ வேண்டாம் என கடை உரிமையாளர்களிடம் நேரடியாக சென்று தெரிவித்து வருவாக கூறப்படுகின்றது.
இங்கே பிரபாகரனின் விசுவாசிகள் அவருக்காக அஞ்சலி செலுத்தவும் புலித்தொழிலாளிகள் தொடர்ந்தும் தமது வருவாயை மேம்படுத்த பிரபாகரன் கொலைசெய்யப்பட்டுள்ள செய்தியை மறைக்கவும் முண்டியடிப்பது அவதானிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment