Saturday, May 9, 2009

பிரபாகரன் தப்பிக்க தயாராக இருந்த நீர்மூழ்கி : இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர்.


விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் தப்பிப்பதற்காக தயாராக இருந்த நீர்மூழ்கியை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். வன்னிபகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் மேஜர் ஜெனரல் ஜகத்ஜெயசூரியா தலைமையிலான படையினர் சோதனை நடத்தினர்.

அங்குலம், அங்குலமாக நடந்த சோதனையில் 360 அடி நீளம், 25 அடி அகலத்தில் உலோகத்தில் வடிவமைக்கப்பட்ட வீடு போன்ற படகை கண்டு பிடித்தனர்.

தனியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த படகுக்கான சுழலிகளும் மீட்கப்பட்டது.

3 பிரிவாக பிரித்து கட்டப்பட்டிருந்த அந்த படகு, நீர் மூழ்கிகள் வகையை சேர்ந்தது. படகின் முன்பகுதியில் என்ஜினும், இதர கருவிகளுடன் கூடிய அறையும் இருந்தது.

படகின் கடைசி பகுதியில் குண்டுகள் துளைக்க முடியாத உலோக அறை இருந்தது. ரெயில் தண்டவாளம் போல் இருந்த பாதைகளுக்கு மேல் அந்த அறை தூக்கி வைக்கப்பட்டிருந்தது.

படகை தொடும் அளவில் ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டிருந்தது. நெருக்கடியான நேரத்தில் இந்த நீர் மூழ்கி படகினை கரையில் இருந்து நேரடியாக கடலுக்குள் செலுத்தி விரைவில் தப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரத்யேக வாய்க்காலை யாரும் கண்டு பிடிக்க முடியாத வகையில் அதன் இரு புறங்களிலும் உலோக தகடுகள் பொருத்தப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.

விடுதலை?1லிகள் தலைவர் பிரபாகரனை தப்பிக்கவை?பதற்காகவே இந்த நீர் மூழ்கி படகு தயார் நிலையில் இருந்ததாக இலங்கை ராணுவத்தினர் கருது கின்றனர்.

நன்றி மாலைமலர்

No comments:

Post a Comment