பத்தாயிரத்திற்கு மேற்பட்ட புலிகள் அரச பராமரிப்பில்.
வன்னி யுத்தம் ஆரம்பமானதில் இருந்து 10000 இற்கு மேற்பட்ட புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புலிகள் படுதோல்வியை தழுவியதை அடுத்து யுத்த சூனியப்பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தை அடுத்து 7237 புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களில் 1601 பேர் பெண்புலிகள் என கூறப்படுகின்றது.
மேலும் 202 புலிகள் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளதாகவும் அவர்கள் அம்முகாம்களில் உள்ள மக்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பிரத்தியேகமாக பாராமரிக்கப்படுவதாக தெரியவருகின்றது. அத்துடன் இதுவரை காலமும் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுள் வந்த மக்களோடு மக்களாக வந்த புலிகளில் 2379 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் வெள்வேறு புனருத்தாபன நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment