Tuesday, May 12, 2009

வாழு அல்லது வாழவிடு. - யஹியா வாஸித்-

கண்ணிழந்த தந்தையினது கவலைதரும் சாயல் ஒரு புறம், திருமணவயதை எட்டிய நிலையில் ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கும் தங்கையின் உருவம் இன்னொரு புறம், இவ்விரு உயிர்களையும் காக்கவேண்டி சுமைதாங்கியாக காட்சி தரும் தம்பியினது திருவுருவம் வேறொரு புறம். ஒரு நாளா, இரண்டு நாளா 14 வருடங்கள் வைத்திய மனையில் கட்டிலின் மீது சிந்தனை மூட்டங்களுக்கு மத்தியில் கிடக்கின்றான் ராஜேந்திரன்.

மருந்துகள், குளிசைகள், வைத்தியமனை தாதிகள், ஓங்கி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் வைத்தியமனை மணி ஓசைகள் இவையெல்லாம் ராஜேந்திரனுக்கு அலுத்துப் புளித்துப் போய்விட்ட சங்கதிகள்....... 1960களில் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இவ்வாறான கட்டுரைகள்தான்.

பாலஸ்தீனத்தில் ஒரு இனம் தெரியாத நபர் வீசிய கைக்குண்டில் இருவருக்கு காயமேற்பட்டது. பொலீஸார் விசாரணை செய்து கொண்டு வருகின்றார்கள் என 1965களில் தினகரன் மூன்றாம் பக்க உலகச் செய்தியை வாசித்துவிட்டு சற்று துணுக்குற்று தினமின பத்திரிகையை புரட்டினால் சப்பை மூக்கு, அகன்ற விழிகள், முழங்கால் சில்லே இல்லாத கால்கள், அகன்று விரிந்த காது, பிள்ளையார் வயிறு, இரண்டு வயது பிள்ளைகளுக்கே உரிய குணாதிசயங்களுடன் மாங்கொட்டை தலையர்கள் (செலுலாய்ட்ஸ் பேபி) 287 பேரை தத்தெடுத்து ஒரு பிரிட்டிஷ்காறன் கம்பளையில் அசோகபுர என்ற இடத்தில் வளர்த்துக் கொண்டிருக்கின்றான் என கண்ணீர் வரவழைக்கும் கட்டுரைகள்.

சம்பல்பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் ராஜா மான்சிங், பட்லி, சந்தண மரக்கடத்தல் மன்னன் வீரப்பன், கேடி மறுசிறா, கேடி சீனா, எம்.ஜீ.ஆர், சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி என உள்ளுர் செய்திகளும் விமானத்தை கடத்திய பாலஸ்தீன பெண்மணி லைலா காலிட், மன்னர் பைசலை அவரது மருமகனே சுட்டுக் கொன்றார் என்ற வெளிநாட்டு செய்திகளும் என 1970 வரை ஒரு குட்டி த்றில்லுடன் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

1971 ஏப்ரல் 4 அதிகாலை 5.15க்கு ஆல் இந்திய வானொலியில் சரோஜ் நாராயண்சாமி. சிறிலங்காவில் சேகுவேரா கிளர்ச்சி நடப்பதாகவும் ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் ஊடாக அவிசாவளை வரை புரட்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சிறிமாவோ அம்மையார் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் சேதி சொன்னார். அப்புறம் ஒரு இரண்டுமாதம் செய்தி கேட்பதிலேயே வயசும் போய் இறுதியாக அனைத்தும் சுபம். ஆம் இந்திய அனுசரணை
யில் அனைத்தும் சுபம்.அம்மையார் ஓள் றைட் என்ற செய்தி வந்தது.

ஓ இனி சிறிலங்காவில் த்றில்லான செய்திகளும் வருமாக்கும் என பத்திரிகைகளை புரட்டினால்
சுதந்திரன், தீப்பொறி என. கொஞ்சம் த்றில். கொஞ்சம் ஆவேசம் என கோவை மகேசன்களும், அந்தனிசில்களும் 1975 வரை ரொம்பத்தான் த்றில் காட்டிவிட்டனர். 1977 வரை வெள்ளை வேட்டிகள். பக்கா வெள்ளை வேட்டி. ரொம்ப பவ்யம், வெள்ளை வெளேர் என்று கொஞ்சம் பேர், கன்னம் கறுப்பா பல பேர். புள்ளி விபரங்களோ. அடேங்கப்பா. எல்லோரும் அடலேறுகள் என்றனர். எங்கட ஆறாம் வகுப்பு வாத்தியார்தான் சொன்னார் அடலேறு என்றால் புலி, சிங்கம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாமாம். ஆனால் சைனாக்காறர்களின் அகராதியில் சிங்கத்துக்கும் புலிக்கும் மாமா வேலை பார்ப்பவர்களையும் அடலேறு என்றுதான் அழைப்பார்களாம் என்ற செய்தி இப்பதான் நமக்கு கிடைச்சிருக்கு.

உசவசம, ஜனவசம என்ற திட்டங்களுடன் என்.எம்.பெரேரா என்ற தங்க மூளையை இடுப்பில் சொருகி வைத்திருந்த சிறிமாவோ அம்மையாரை 1976களில் தூக்கி கடாசிவிட்டு. தலையை தடவி கழுத்தை அறுப்பதில் ரொம்ப கெட்டியான அந்த நெடிய மூக்கன் ஜே.ஆர்.வந்துள்ளார் என புத்திஜீவிகள் எல்லாம் கொம்பு சீவ முற்பட. அதெல்லாம் இந்த யாழ்ப்பாணத்தானுக்கிட்ட பலிக்காது என பெடியளை கை காட்டி. இனி கில்லிதான் என்ற செய்திகள் 1990 வரை சிறிலங்காவை ஆக்கிரமித்தது.

கில்லி பார்க்கலாம் என பத்திரிகைகளை புரட்டினால்.... அப்புறம்.. றேடியோ.. அப்புறம்... ரிவி.... அப்புறம்... சனியன் புடிச்ச கொம்பியூட்டர்... என வந்து... இன்டர் நெட் என்ற சனியன் சகட ஊடாக.... மீண்டும்... மீண்டும்... 1960 களில் வாசித்த.............. கண்ணிழந்த குழந்தைகளினது கவலைதரும் சாயல் ஒரு புறம், கால்களை இழந்த சகோதரிகளின் கண்ணீர்விட்டு குமுறியழும் வேதனை மறு புறம், தண்ணீர் குடித்து நாளாய்ச்சு என்ற வயோதிபர்களின் அங்கலாய்ப்பு மற்றொரு புறம், உறவினர்களைக் காணலையே என பி.பி.சி.யில் அழும் புலம் பெயர்ந்த இரத்தங்களின் சோகம் இன்னொரு புறம் என உலகம் முழுதும் கண்ணீரும் கம்பலையுமாக மொத்த தமிழனும்.

அன்று ஒருமையாக இருந்தது இன்று பன்மையாக மாறியுள்ளது. தட்ஸ்ஓள். இடையில் ஒரு முப்பது வருடம் போயுள்ளதே இந்த முப்பது வருடத்தில் இந்த யாழ் புத்திசாலிகள் என்று சொல்பவர்கள் என்ன மயிரை சாதித்தார்கள். இப்போது மீண்டும்.... வேண்டாம். இனி அரசியலே வேண்டாம். கொஞ்ச நாளைக்கு அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு மொத்த பொது மக்களாகிய நாம் நமது வயிற்றுப்பாட்டை முதலில் கவனிப்போம்.

சிறிலங்காவில் நடக்கும் மொத்த அரசியலையும் பார்க்கும் போது மகிந்த குறூப்
ஒரு முடிவோடுதான் இருக்கின்றது போல் தெரிகிறது. ஒருத்தர்ர கதையையும் மனிஷன் கேட்கிறாப்போல காணோம். முதலில் கிளீன். முதலில் வெல் கிளீன் பண்ணிவிட்டு அப்புறம் நாத்து நடப்போகின்றார் போல் தெரிகிறது. அதையும்தான் பார்ப்போமே. கொஞ்சம் விட்டுப் பிடித்தால்தான் என்ன. இல்லை அவர் செய்ய மாட்டார். இவரும் முன்னாள் அரசியல்வாதிகள் மாதிரித்தான் இருப்பார் என்று ஏன் இப்போதேஅடம் பிடிக்க வேண்டும். அடம்பிடித்து அடம் பிடித்து கண்ட பயன் என்ன. மொத்த வட மாகாண மக்களையும் அடகு வைத்து வீதி வீதியாக அலைய வைத்ததுதான் மிச்சம். ஆனால் இந்த போராட்டத்தால் வட மாகாண புத்திஜீவிகள் என்று சொல்பவர்களைத்தவிர ஏனைய அனைவரும் நன்மைதான் அடைந்துள்ளனர்.

சும்மாகிடந்த சிங்களவர்களை சீண்டப்போய் இன்று உலகில் அதிசிறந்த இராணுவம், எண்ணி 238 குடும்பங்களே வசித்த வடக்கில் ஒண்ணரை இலட்சம் இராணுவ வீரர்கள், இராணுவ வீரர்களெல்லாம் செந்தமிழ் பேசுகின்றார்கள், எங்கட யாழ்ப்பாண தெருக்களின்ட அமைப்புக்களே இராணுவ வீரர்களை திக்குமுக்காடச்செய்யும் என்ற. அந்த தெருக்களைத்தாண்டி பங்கர்களையும் மோப்பம் பிடிக்கக் கூடிய அனுபவம், உலக அரங்கில் சிறிலங்கா என்ற ஒரு நாடு இருக்கின்றது என்று ஒவ்வொரு குடிமக்களுக்கும் விளம்பரம், ஒரு காலத்தில் சிறிலங்கா அரச நிர்வாகத்தையே நடாத்திய மொத்த யாழ்ப்பாணியையும் தூக்கி வீசிவிட்டு சிங்களவர்களான எங்களாலும் திறம்பட அரச நிர்வாகம் செய்ய முடியும் என சிங்கள பாமரனையும் சிந்திக்க தூண்டியுள்ளது.

அடி, மரண அடி, மரண பயம் வரக்கூடிய சம்மட்டி அடி அடித்தால் சிங்களவன் பயந்துடுவான் என்று சொல்லிக் கொண்டு சிங்கள கிராமங்களில் சவள் அடி என்று அதிமேதாவித்தனம் காட்டப் போய். அட போங்கப்பா. எத்தனை சிங்களவன் செத்தா எங்களுக்கென்ன என அடுத்த வேலையைக் கவனிக்கக் கூடிய பக்குவத்தை சிங்கள மக்களுக்குள் வளர்த்துள்ளது. சிங்கள மக்கள்தான் இப்படி என்றால் நடுத்தர தமிழ் மக்கள் ரொம்பத்தான் திரிந்திட்டாங்கள். மெதுவாக கடன கிடன பட்டு பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது ஒரு கூட்டம். அது முடியாதவர்கள் கொழும்புக்கு இடம்மாறி தாமுண்டு தம்பாடுண்டு என வாழ்க்கையை வளம் படுத்திக் கொண்டனர்.

யாரோ ஒரு முஸ்லீம் இராணுவ அல்லது பொலீஸ் உளவாழி இயக்கத்தை காட்டிக் கொடுத்தான் என்பதற்காக முழு முஸ்லீம் சமுதாயத்தையும் ஓரம்கட்டப் போய் சும்மா கிடந்த சோனிக் காக்காமார்களெல்லாம் உலக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். மொனறாகலைக்கு வாழைப்பழம் வாங்கப் போனவன் யு.எஸ்.ஏ.வில் கேஷ் அன்ட் கரி வைத்துக் கொண்டும், மூதூரில் வெள்ளாம வெட்டப் போனவன் நோர்வேயில் சிக்கன் சொப் நடாத்திக் கொண்டும், கண்டியில் மொபைல் போன் பிஸினஸ் பண்ணினவன். ஐயா நான் புலி. சிங்கள ராணுவம் என தேடுகின்றது என கனடாவில் அசைலம் எடுத்துக் கொண்டும் ஒரு வீறு நடை போட்டுக் கொண்டு திரிகின்றான்.

இவை இப்படி என்றால் இந்திய தமிழர்களுக்கு அடிச்சது சாண்ஸ்.விஸிட்டிங் விசாவில யுரோப்புக்கு வந்து. ஐயா நான் வவுனியா தமிழன். சிங்கள இராணுவம் என்னை வீதி வீதியாக தேடுகின்றது என கூறிக்கொண்டு கிளீன் போல்ட் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி, மொத்த புத்திசாலித்தனத்தையும் பாவித்து அகண்டு விரிந்த வட கிழக்கு தமிழீழத்தை ஒண்ணரை மைல் பரப்பளவுக்குள் கொண்டு வந்துள்ளது. முப்பது வருடம் என்னத்தை சாதித்துள்ளீர்கள். ஒரு நாலாம் வகுப்பு பையன் கூட இரண்டு தரம் சறுக்கி விழுந்தால் மூன்றாவது தரம் மிக கவனமாக எழும்பி துள்ளி ஓட தொடங்கி விடுவான்.

எத்தனை தரம், எத்தனை தடவை ஆனானாப் பட்டவனெல்லாம் வந்து கால்ல விழுந்தும் நடக்காதது இப்போ மரண அடி, சவள் அடி என விழுந்ததும் நாங்க எப்போவோ சமாதானத்துக்கு ரெடி நீங்க ரெடியா எனக்கேட்டுக் கொண்டு...... மொத்த தமிழனும் சமாதானத்துக்கும் ரெடி, நிம்மதியாக வாழ்வதற்கும் ரெடி. நீங்க பங்கர விட்டு கிளம்பி வந்து சரணடைய ரெடியா. அத முதல்ல சொல்லுங்க.

கருணா வாழ்வாரா சாவாரா,பிள்ளையான் குட்டிக்கரணம் அடிப்பாரா அரசாட்சி செய்வாரா. பிள்ளைகள் கடத்தப் படுகின்றார்களே. கிழக்குமாகாணம் ஏன் கொதித்தெழாமல் இருக்கின்றது.
கிழக்கு மாகாண சபையில் எதுவுமே இயங்கலையாமே. இதை கிழக்கு மககாணத்தவனும் கருணாவும் பார்த்துக் கொள்வார்கள்.முதல் நீங்கள் உங்கள் குண்டியை கழுவுங்கள். ஊரார்ர குண்டியை நீங்கள் கழுவப் போய் விபரமே தெரியாத மொத்த வன்னி மக்களும் விறைத்துப் போய்க்கிடக்கின்றனர்.

தமிழன் கண்டியில் கடை வாங்கலாம்,தமிழன் கொழும்பில் வீடு வாங்லாம்,தமிழன் கேகல்லயில் வீடு கட்டலாம்,தமிழன் மகியங்கனையில் இன்ஜினியராக வேலை பார்க்கலாம்,சோனி மொனறாகலையில் பள்ளி வாசல்கட்டலாம், சோனிகள் கொள்ளுபிட்டியில் தொடர்மாடி கட்டலாம் ஆனால் எந்த சிங்களவனும் வட கிழக்கில் ஒரு மயிரையும் புடுங்க கூடாது. அது சிங்கள அத்துமீறல், சிங்கள குடியேற்றம். இதுதான் எங்கட ஜனநாயகம்.

வெள்ளையனுகள் இந்தியர்களுக்கு சேர் பட்டம் வழங்க அழைத்த போது. இந்தியர்கள் பிரிட்டிஷ் குள்ளநரிகளின் இந்த பதவி எமது கால் தூசுக்கு சமானம் என காறி உமிழ்ந்தார்களாம். அந்த எலும்புந்துண்டையும் போய் நக்கித் தின்றவர்கள் நம்ம புத்திசாலிகளான அருணாச்சலங்களும், பொன்னம்பலங்களும்தான். அவ்வளவு மூளை. நல்லகாலம் எங்கட வாப்பாமார் எங்கள சேர் பட்டம் எல்லாம் வாங்கிற அளவுக்கு படிப்பிக்கல. படிப்பிச்சிருந்தா எங்களுக்கும் இன்னேரம் ஒரு நாலு கொம்பு மொழைச்சிருக்கும். அய்யண்ணா நாவன்னாவுக்கு முன்னால பர்தாவொட நாலு சோனத்திகள் சட்டிபானைகளுடன் அழுதிருப்பாளுகள். கொசுறு.

கடந்த நான்கு மாதமாக எனது நண்பரிடம் வந்து தலைவர் ரொம்ப புத்திசாலி, தலைவர்ர சூட்சுமமெல்லாம் இந்த மோட்டு சிங்களவனுக்கு எங்கே தெரியப் போகின்றது என கொமன்றி சொல்லிக் கொண்டிருந்த ஒரு குட்டிப் புலி. நேற்றும் வந்து அதே பல்லவியை பாடிவிட்டு. போகும் போது எல்லாம் இந்த சோனியா வே...யால வந்ததுதான் என்ற ஒரு உண்மையை தொண்டைக்குள்ளால் புறு புறுத்துக் கொண்டு செல்கின்றது. ஆக யூரோப்புல தம்பிகளுக்கு விசயம் விளங்கத் தொடங்கிவிட்டது. VIII
12-05-2009

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com