Thursday, May 7, 2009

புலிகளால் நிர்மானிக்கப்பட்டுக் கொண்டிருந்த சப்மறைனை ஒத்த சிறிய ரக நீர் முழ்கி மற்றும் நீர்த்தடாகம்.



கரையாமுள்ளிவாய்க்கால் வடக்குப் பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது புலிகளினால் தாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த சப்மறைனை ஒத்த சிறிய ரக நீர் மூழ்கி ஒன்று படையினரால் கைப்புற்றப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் படையினர் இப்பிரதேசத்தை கைப்பற்றியபோது புலிகள் இவற்றை விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.

அப்பிரதேசத்தில் புலிகளால் அவசர அவசரமாக நீர்மானிக்கப்பட்டுள்ள 200 அடி நீளம் 150 அடி அகலமான நீர்த்தடாகம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத் தடாகத்தின் ஆளம் 20 அடி. அது கண்டு பிடிக்கப்பட்ட போது 10 அடிக்கு நீர் நிரப்பட்டிருந்துள்ளது. தடாகத்தின் அடியில் கொங்றீர் போட்டு நீரை தாங்கிக் கொள்ளக்கூடியவாறு மெழுகப்பட்டுள்ளது.

புலிகள் புதிகாக நிர்மானிக்கின்ற படகுகளையும் திருத்தங்களை மேற்கொள்கின்ற படகுகளையும் பரிட்சார்த்தம் செய்வதற்கு இத்தடாகத்தினை பாவித்துவந்துள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள சப்மரைனை ஒத்த சிறிய ரக நீர் மூழ்கி இத்தடாகத்தில் பரிட்சார்த்தம் பார்க்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் புலிகளது கடைசிக்காலம் என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது. திருத்துகின்ற படகு ஒன்றினை பரிட்சார்த்தம் பார்ப்பதற்கு தரையிலே தடாகம் ஒன்றை அமைக்கவேண்டிய நிலைக்கு கடற்புலிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றால் மிகுதி எவ்வாறு இருக்கும் என்பதை இலகுவாக எடைபோட்டுக்கொள்ளமுடியும்.

...............................

No comments:

Post a Comment