Saturday, May 16, 2009

பயங்கரவாதமற்ற ஒரு தேசத்திற்கு திரும்புகின்றேன் - ஜனாதிபதி


ஜனாதிபதி அவசரமாக நாடுதிரும்புகின்றார்.
ஜி11 மற்றும் உலகபொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இலங்கை ஜனாதிபதி தான் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்ட எனது தேசத்திற்கு திரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார். ஜோர்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜயத்தினை இடைநிறுத்தி கொண்டு நாளை அவசரமாக நாடு திரும்புகின்றார்.

வன்னியின் நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலரினால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டதை தொடர்ந்து அவசரமாக திரும்பும் அவர் நாட்டு மக்களுக்கு ஓர் விசேட செய்தியைச் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com