Saturday, May 30, 2009

பான்கீமூனின் இலங்கை விஜயம் தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்புச்சபையில் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் ஆராய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் தற்போது மோதல்கள் இல்லையென்பதால், இலங்கை விவகாரம் குறித்து பாதுகாப்புச்சபைக்கு தெரிவிக்கவேண்டிய அவசியமில்லையென கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச்சபையின் கூட்டத்தில் சீனா, ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகள் சிபாரிசுகளை முன்வைத்திருந்ததாக இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் பொதுமக்களின் நிலைமை ஐக்கிய நாடுகளில் மிகத் தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் இன்னர்சிற்றிபிரஸ் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அடித்தளத்தில் பான்கீமூன் இலங்கை விஜயம் தொடர்பில் பாதுகாப்புச்சபையில் தெரியப்படுத்துவாரென குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இது இடம்பெறவில்லை.

இதேவேளை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் பான்கீமூனை கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையிலிருக்கும் முகாம்களை பாராட்டியதாகவும், இதன் மூலம், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசேட அமர்வின்போது சர்வதேச விசாரணைக்காக விடுக்கப்பட்ட அழைப்பு தோற்கடிக்கப்பட்டதற்கு பான்கீமூன் பங்களிப்புச் செய்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக சாடியுள்ளது.

Thanks INL

No comments:

Post a Comment