இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் - தமிழக முதலமைச்சர் கருணாநிதி சந்திப்பு.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை இராணுவரீதியில் தோற்கடித்ததை அறிவித்ததன் பின்பு, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், போரினால் இடம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் மறுவாழ்வு குறித்தும், இலங்கையில் நிலவும் நிலவரம் குறித்தும் ஆராய்வதற்காக, தனது சார்பில் சிறப்புத் தூதுவர்களாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.எம் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பினார்.
இலங்கைக்கு வந்த இந்திய குழுவினர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்ததாகவும், இந்திய குழுவினரது இந்த இலங்கை விஜயம் தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.எம் நாராயணன், தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு விளக்கி கூறியதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment