ஈழப்போர் நான்கின் போது கைப்பற்றப்பட்ட சகல ஆயுதங்களும் காலி முகத்திடலில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
இலங்கையில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக எதிர்வரும் 03ம் திகதி யூன் மாதம் தேசிய வெற்றி விழா கொண்டாடப்பட இருக்கின்றது. காலி முகத்திடலில் இடம்பெற இருக்கும் இந் நிகழ்வில் மாவிலாறு முதல் வன்னி வரை புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கண்காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள், போர்முனைத் தளபதிகள் மற்றும் போரில் பங்கெடுத்த இராணுவவீரர்கள் கலந்துகொள்ள உள்ளதுடன் அவர்கள் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment