வருந்துகின்றோம். - யஹியா வாஸித் -
குல்லுநப்சின் தாயிகதுன் மவுத். மூச்சுவிடும் அத்தனை ஜந்துகளும் மரணம் எனும் பானத்தை அருந்தியே ஆகவேண்டும். – அல்குர்ஆன்.
திரு.வேலுப்பிள்ளையின் இளையமகனும்,சிறிலங்காவின் வடமாகாணத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தவரும், 1973களில் உதயமான தனிநாட்டுக் கேரிக்கைகளை முன்னின்று நடாத்தியவர்களில் ஒருவரும், தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் எனவே உலகில் உள்ள மொத்த முயலுக்கும் மூன்றுகால்தான் என புதிய லொஜிக் (அளவையியல்) கதைகளை சொல்லி விபரம் புரியாத தமிழ் உள்ளங்களில் குடியிருந்தவரும், அகிம்சை, சத்தியம், சாத்வீகம், ஜீவகாருண்யம், பாவ புண்ணியம் என்ற அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு புதிய பாதை வகுக்கப்போன திரு.வே.பிரபாகரன் அவர்கள் பாவாத்மாவாக இன்று அகால மரணமானார்கள்.
இன்னாலில்லா ஹி வயின்னா இலைஹி றாஜிஊன். யாஅல்லாஹ் உன்னிடத்தில் இருந்து வந்தோம். உன்னிடத்திலேயே திரும்பி வருகின்றோம். இவர் யாழ் முன்னாள் மேயர் துரையப்பா தொடக்கம் வன்னியில் குடியும் குடித்தனமுமாக நேற்றுவரை சந்தோஷமாக வாழ்ந்த அப்பாவி ஜீவன்களின் மரணத்துக்கும், திலீபன் தொடக்கம் அன்னை பூபதி அம்மா வரை உண்ணா நோன்பிருந்து உயிர்விடவும், இந்தியாவில் தீக்குளித்த முத்துக்குமார் தொடக்கம் ஜெனிவாவில் தீக்குளித்த முருகதாஸ் வரையானவர்களின் வன்மரணத்துக்கும் காரணமானவர்.
மேலும் சிலங்கா என்றில்லாமல் அகண்ட இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்று தற் இஸ் ஜஸ்ட் சிமோள் துன்பியல் மரணம் என சொன்னது மட்டுமல்லாமல். புலம்பெயர் நாடுகளில் வீதிகளை மறித்து விபரமமே புரியாத குட்டிக் குட்டி பையன்களும், துடுக்குத்தனமான அக்காக்களும் அறிக்கைகள் விட்டு தங்க வந்த நாட்டில் தான்தோன்றித்தனம் வளர வழிசமைத்தவர்.
திரு.வே.பிரபாகரன் அவர்கள் தான் மட்டும் பணம் உழைக்காமல் பணம் திரட்ட என ஒரு குழுவை அமைத்து அவர்களையும் குட்டி தொழிலதிபர்கள் ஆக்கியதுடன் ரி.வீ,றேடியோ சனல்காறர்களையும் இருபத்திநாலு மணித்தியாலங்கள் இயங்கவைத்து நாலுகாசு அவர்களும் சம்பாதிக்க களம் அமைத்துக் கொடுத்தவர்.
அவர் அம்பாரை காட்டுக்கு மூவ் பண்ணிவிட்டார், இல்லை இல்லை சிங்கள வனங்களுக்குள் ஐநூறு பொடிகாட்டுகளுடன் மூவ் பண்ணிவிட்டார் என அரசியல் ஆய்வாளர்களெல்லாம் ஆய்வு சொல்ல வழி அமைத்துவிட்டு இறுதிவரை களத்தில் நின்று உயிர்விட்ட ஜென்ரில்மேன்.
எல்லோரும் நாலு காசு உழைத்தால் போதும் என்று நினத்து வாழ்க்கையுடன் போராட. இவர்மட்டும் காசுழைக்க எழுபதாயிரம் உயிர்களை பணயம் வைத்த புண்ணியவான்.
யாஅல்லாஹ். பத்வா (தீர்ப்பு) கொடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லவே இல்லை. அதை வழங்குவதற்கான முழுதகுதியும் உனக்கே உள்ளது.
இறைவா. இவர் செய்த முழுபாவத்தையும் மன்னிப்பாயாக.
இறைவா. இவர் செய்த மனிதக் கொலைகளையும். இவரது தளபதிகள் செய்த முழுப் பாவங்க
ளையும் மன்னிப்பாயாக.
இறைவா. இவரது வழிநடத்தலால் வழிகெட்டுப் போன அந்த மாவீரர்கள் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக.
இறைவா. இவரால் இன்று தன் முகத்தை இழந்துள்ள விடுதலைப்புலிகளின் இயக்க நண்பர்கள் செய்த சகலபாவங்களையும் மன்னிப்பாயாக.
இறைவா. சிறிலங்காவில் இனியொரு விதிசெய்வாயாக.
அன்னாரினதும், அவருடன் உயிர்நீத்த அந்த ஜீவன்களினதும், உயிர்களும் விலைமதிக்க முடியாததே.
இந்த பொன்குஞ்சுகளை ஈன்ற அந்த தாய் தகப்பனுக்கும்,அவர்களது உடன் பிறப்புகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹ் கரீம். இறைவன் போதுமானவன்.
அல்லாஹ் அஹ்லம். இறைவன் எல்லாம் அறிந்தவன்.
( அநீதிக்குட்பட்டவன் மன்னிக்காதவரை. அநீதி செய்தவனை இறைவன் மன்னிக்கேமாட்டான் -ஹதீஸ்)
19-05-2009
0 comments :
Post a Comment