Sunday, May 10, 2009
புலிகள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரத்தால் இந்தியாவிற்குள் நுளையக் கண்வைத்துள்ளதாக இந்தியக் கடற்படை அறிவித்துள்ளது.
ஒரு சின்னக் கீலத்துக்குள் இலங்கைப்படைகளால் முடக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் மேற்குக் கரையோரமாக நுளைய எத்தனிப்பு என்று ஓர் அனுபவம்வாயந்த கடற்படை அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு கரையோரங்களைக் கரிசனையாகக் கண்காணித்துவரும் கடற்படை, இலங்கை மக்கள் , புலிகளும் கூடவே சட்டவிரோதமாக மேற்குக் கடற்கரையோரமாக நுளைய முயற்சிக்கிறார்கள் என்று Vice-Admiral S.K. Damle , Flag Officer Commanding in Chief, Southern Naval Command இந்திய செய்தித்ஸ்தாபன அறக்கட்டளைக்குக் கூறியுள்ளார்.
Mandovi க்கு அண்மையில் ஓர் அணிவகுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இதை சாவதானமாக இயம்பியுள்ளார். பொலீசும் மற்றய பாதுகாப்பு நிறுவனங்களும் புலிகள் இந்தியாவுக்குள் நுளைய எத்தனிப்பாதாகக் கடற்படையிடம் கூறியுள்ளனர்.
இந்தப் பிரச்சனை இன்று நேற்று மாத்திரம் வந்ததல்ல வென்றும் இது தொடர்ந்து இருந்து வந்ததுதான் என்றும் தாம் இதுபற்றிக் கவனமாக இருக்கிறோம் என்றும் இந்தியக் கடற்பரப்புக்குள் புலிக் கப்பல்கள் ஏதும் நுளைந்ததற்கான அடையாளம் ஏதும் இலலையென்றும் அவர் கூறியுள்ளார்.
எமது எல்லைக்குள் அங்கு புகத் தகுதியற்ற எவரையும் நுளையவிடாமற் தடுப்பதில் தாம் கவனமாகவே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்படையைப் பொறுத்துவரை அவர்கள் தாங்களாகவே தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்றும் இலங்கைக் கடற்படைக்கம் இந்தியக் கடற்படைக்குமிடையே ஏதும் இணைந்த செயற்பாடுகள் இல்லையென்றும் டம்லே கூறியுள்ளார். (PTI - The Hindu)
No comments:
Post a Comment