உப பொலிஸ் பரிசோதகர் சுட்டுக்கொலை.
பொத்துவில் சியம்பலாண்டுவ வீதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிளந்துள்ளதாக தெரியவருகின்றது. அடையாளம் கண்டுகொள்ளத் தவறியமையாலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசேட அதிரடிப் படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் அக்கரைப்பற்று வியாபார நிறுவனம் ஒன்றினுள் புகுந்த துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஓருவர் காயமடைந்துள்ளார் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment