Tuesday, May 19, 2009

என்றும் துன்பமில்லை வெறும் சோகமில்லை இனி இன்பநிலை வெகுதூரமில்லை . வ.அழகலிங்கம்-கம்பர்மலை

இலங்கையில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் கூலிப்பாசிசக் குண்டர்படையான புலி தோற்கடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மேற்குலக ஏகாதிபத்தியங்கள் தங்களது கள்ளப் பிள்ளையான புலியைக் காப்பாற்றி யுத்தத்தை நீடித்து மேலும் ஆயுதவிற்பனை போன்ற கொள்ளை லாபங்களையும் எதிர்காலத்தில் இலங்கை வர்த்தகத்தில் தமக்கு இதுவரைகாலமும் இருந்த பிடியை வைத்திருக்கவும் முயற்சித்தன.

இதன் கடைசி வெளிப்பாடாக அமெரிக்க அரசாங்க அதிபர் கில்லரி கிளிங்ரன் சர்வதேச நாணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட 1.9 பில்லியன் டொலர் கடனுதவியை தானே தனிப்பட்ட முறையில் தலையிட்டுத் தடுத்து வைத்துள்ளார். நேற்றுவரை சர்வதேச நாணய சபை பொருளாதார காரணிகளை மட்டும் காரணம் காட்டி இப்படியான கடன் கொடுப்பனவுகளைத் தடுத்தது வழக்கம். ஆனால் இம்முறை இலங்கைக்கோ அரசியல் மற்றும் மனித உரிமைக்காரணங்களைக் காரணங்காட்டித் தடுத்து வைத்துள்ளார்.

ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளும் பிரத்தியேகமானவை. வெவ்வேறு வரலாற்றுப் பின்னணிகளால் உருவானவை. ஆனால் இலங்கை தனக்கே உரிய விதிவிலக்கைக் கொண்டது. ஒரு சமாந்திரத்தைப் பார்த்து ஒப்புநோக்குவது விளங்கிக் கொள்வதற்கு இலகுவானது. ஒரு யுத்தத்தில் ஒரு தேசமோ இனமோ தோற்றபின்பு வெற்றியீட்டப்பட்ட படைகளாலும் தேசத்தாலும் மானபங்கப்படுத்தப்படுவதும் அவமானப் படுத்தப் படுவதும் சூறையாடப்படப் படுவதுமே வரலாறு.

உதாரணத்திற்கு ஜேர்மனி இரண்டாம் உலகத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்பு அமெரிக்க இராணுவத்தின் பாலியற் பலாத்காரத்தால் ஜேர்மன் பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகள் நாற்பதினாயிரமளவாகும். இப்பிள்ளைகளது தோலின் நிறம் பாற்கோப்பி நிறமாக வெள்ளையும் இல்லாமல் கறுப்புமில்லாமல் இருப்பதால் பாற்கோப்பிப் பிள்ளைகள் என்று ஐம்பதுகளில் அழைக்கப் பட்டார்கள்.

ஆனால் இன்றய இலங்கை நிலவரமோ முற்றிலும் பிரத்தியேகமானவை. இராணுவம் தாயன்போடு தோற்கடிக்கப் பட்ட வன்னித்தமிழர்களைப் பராமரிப்பது நன்றியுணர்வையும் கடமைப்பாட்டையும் தோற்றுவிக்கும் காட்சிகளாகும். எழுபதுகளில் நாம் தமிழரெல்லாம் சிப்பாய்களைக் கண்டால் ஒடுவதும் இலங்கைப் படைகளை ஒட்ட வெறுக்கவும் பழக்கப் பட்டவர்கள். வன்னிச் சனங்கள் ஒருநாளும் பிச்சை எடுத்த வரலாறே இல்லாத சனங்கள், இராணுவத்திடம் கெஞ்சிக் கையேந்தும் காட்சி இதயத்தை வெடிக்க வைக்கும். ஈரல் தீயும். கண்களே நம்ப மறுக்கும்.

எந்த யுத்தமுமே ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை முற்றாக அழிக்க முடியாது. ஒரு வரண்ட கற்பாறையை உடைத்துத் தோண்டினால் எவ்வாறு பருகக் கூடிய நன்னீர் பீறிட்டு வருகிறதோ அதேபோல புத்த நாகரீகத்தின் உறைந்து போன நற்குணாம்சங்கள் மீண்டும் இலங்கையில் வருவதை இப்பொழுது தரிசிக்கலாம். புத்தரின் போதனைகளில் அதிமுக்கியமானது ஒன்றுண்டு. ஒரு யுத்தத்தில் தோற்றவனிலும் பார்க்க ஒரு யுத்தத்தை வென்றவன் நிம்மதியாக இருக்க மாட்டான் என்பதுவாகும். தோற்றவர்களின் பிரச்சனைகளின் முடிவிலே வென்றவர்களின் பிரச்சனை தொடங்குகிறது. இருந்த போதும் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகமும் பயத்தோடு வாழும் மன அழுத்தங்களிலிருந்து மீண்டு தாம் மறுநாளும் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டார்கள்.

உண்மையில் தமிழ் மக்கள் தோற்கடிக்கப் படவில்லை. தமிழ் இனவாதமும் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அடிவருடித்தனமுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் வீழ்ச்சியே புலியின் தோல்விக்கான முன்நிபந்தனையாகும். இதைப் பிரபாகரனின் கடைசி மாவீரர் உரையில் அவர் கூறிய சர்வதேச சமூகங்கள் தம்மை ஏமாற்றி விட்டது என்ற கூற்றே காட்டுகிறது. இன்றய தமிழ் நெற்றில் கூட மேற்குலகத்தின் வீண்பேச்சுக்கள் அம்பலமாயின். அவர்களது வெட்கங்கெட்ட செயல்கள் அம்பலமாகின என்றே கூறியுள்ளது.

இருந்தபோதும் பொரும்பாலான யுத்த பிரதேசத்தில் இருந்து மீண்ட தமிழ் மக்களுக்கு நரகப் போறணையிலிருந்து- ஆறுதலும் அரவணைப்பும் தானாகக் கிடைக்கும் ஒரு சூழலுக்கு வந்த ஒரு உணர்வே உள்ளது. எனினும் புத்தி ஜீவித் தமிழர்கள் எதிர்காலம் பற்றி ஏங்குகிறார்கள். ஒவ்வொரு வரலாற்று நெருகடிகளும் பெரிய படைப்புத் திறனையும் படைத்துத்தான் போயிருக்கின்றன. உதாரணத்திற்கு 1945 இல் ஜேர்மனி தோற்று அவமானமாக சரணாகதி அடைந்த பின்பு அகதி முகாங்களிலே அன்னியர் கொடுத்த கஞ்சியையும் கூழையும் பிச்சையெடுத்து உண்டார்கள். 1947 லே அவர்கள் வீடுகளுக்குப் போய் தொழில்களையும் செய்யத் தொடங்கினார்கள். 1948 அளவில் அவர்களது விலைக்கு வாங்கும் சக்தியும் நுகரும் சக்தியும் ஓரளவுக்கு வளர்ந்தது. 1951 அளவில் அவர்களது சக்தி வீடுகளுக்கு சோபா றேடியோ வாங்குமளவுக்கு உளர்ந்தது. 1953 அளவில் அவர்கள் பொப் இசை விழாக்களுக்கப்போகவும் உல்லாசப்பயணங்கள் மேற்கொள்ளுமளவுக்கு உயர்ந்தது.

இதேபோல சிறீலங்கா அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும். ஆனால் ஜேர்மனியின் நிலமையோ 1929 உலகப் பொருளாதாரப் பொரும்பொறிவு முடிவுறும்காலத்தில் மீண்டும் பொருளாதாரம் வளரும் காலத்திலும் ஏற்பட்டது. ஆனால் இன்றய இலங்கை நிலமையோ உலக பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்திலும் உலகம் முழுவதும் முழு நாகரீகப் பின்னடைவிலும் வர்க்கப்போராட்டத்திலும் ஏகாதிபத்திய யுத்தங்களிலும் புகும் சகாப்தத்திலும் ஏற்பட்டுள்ளது. அதாவது பெரிய பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் ஏற்பட்டுள்ளது. இன்று வீதிக்கிறங்கி இனிமேல் வெடிச்சத்தம் கேளாது என்ற மகிழ்ச்சியில் குதூகலிக்கும் மக்கள் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படி போராடத் தொடங்குவதை எவரும் எதிர்பார்க்கலாம்.

கொல்லப்பட்ட சிப்பாய்களின் தாய்மாரும் விதவைகளும் ஊனமுற்றோரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முற்றாகவே உண்மைகளை அறியக்கூடிய வழி பிறக்கும். சிங்கள தமிழ் சகோதர வெறுப்புகள் பெரிய படிப்பனைவுகளை உண்டாக்கியதால் கடந்தகாலப் பிரித்தாளும் தந்திரோபயங்கள் மேலும் பாவிக்கக் கூடியதாக அதிகமாக இருக்காது.

உண்மையில் எழுபதுகளின் பிற்பகுதியில் உலக பொருளாதாரம் மற்றும் அரசியலானது அதி வேகத்தில் மாறிக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் மக்கள் அதற்கேற்ப தாமும் அதீத கதியில் மாறி இசைவாக்க மடைந்து உலக நடப்புக்களுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ள இயலாமையாலேயே இந்த முப்பது வருட அழிவு ஏற்பட்டது. இன்று உலக மாற்றங்கள் அதிவேகத்தில் மாறுகின்றன. அதற்கேற்ற தமிழர்களும் தம்மை மாற்றி மற்றய உலக மனிதர்களோடு செயற்பாடுகளிலும் சிந்தனைகளிலும் மாறித் தமது குறுந்தேசிய மனப்பான்மையைவிட்டுக் குறைந்தபட்சம் தமிழ் சிங்கள மக்களோடு அன்னியோன்னியம் பூணும் வழிதுறைகளையும் செயற்பாடுகளையும் தேடிக் கொள்ள வேண்டும். அதன் முன்நிபந்தனையாகத் தமது முந்தய காலவாதி ஆகிப் போன தமிழின் பேரால் உண்டாக்கிய குட்டி முதலாளித்துவ சந்தேகவாத உள்ளும் புறம்பும் இனவாத நாற்ற மடிக்கும் கட்சிகளை நிராகரிக்க அதீத துணிவு பெற வேண்டும். சிங்கள முஸ்லீம் மக்களிடையே இனவாதத்தை விசுவாசமாகத் தூக்கியெறிந்த தேசியக் கட்சிகளோடு அதாவது பாட்டாளிவர்க்க சாவதேசியவாதத்தையும் சர்வதேச சகோதரத்தவத்தையும் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடிக்கும் கட்சிகளை அடையாளங்கண்டு அவைகளோடு ஐக்கியப்பட்டு அக்கட்சிகள் சிறிய கட்சிகளாக இருந்தாலும் அவைகளைப் பெரும்பான்மையாக்கும் திசையில் தமது சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்றய அவல நிலையில் தமிழ்மக்கள் மீண்டும் அரசியலுக்குள் உற்சாகத்தோடும் உணர்மையோடும் போவார்களோ என்பதுவே பெரிய சந்தேகம்தான். ஆனால் அரசியலானது வாழ்வதற்குப் பிராணவாயு எப்படியோ அதேபோல அரசியலும் வாழ்வுக்கு இன்றியமையாதது.
இன்றோ பிரபாகரன் ஓர் இறந்த கால மனிதன். ஆனால் பிரபாகரன் வாழ்ந்த ஒரு காலமும் உண்டு. எல்லாவகையாலும் சக்தி குறைந்த மிகப் பலவீனமனிதனாக இருந்த போதும் இந்தப் பெரிய அரசியற் பொறுப்பை எடுத்து முப்பது வருடம் தலைமறைவு பங்கர் வாழ்கைகள் வாழ்ந்து ஒவ்வொரு செக்கணும் ஆபத்தின் மத்தியில் வாழ்ந்து மாபெரும் அதிகாரங்களோடு மோதி அழிந்து பட்ட மனிதனாகும். அது ஒரு படிப்பனவாகும். யாழ்பாணப் படித்த சமுதாயம் இந்தப்பொறுப்புகளை எடுக்க முதுகெலும்பு இல்லாததாலும் பிரபாகரனைக் குள்ள வழிகளால் தமது காசாலும் தமது பட்டங்களாலும் தங்களது இங்கிலிசாலும் பிற்போக்கு அரசியலுக்கு இழுத்துச் சென்று அதாவது முதலாளித்துவ அரசியலுக்கு இழுத்துச் சென்று தமிழ்மக்களையும் அழிப்பித்து இலங்கையையும் அழிப்பித்து விட்டார்கள் என்பதுவே வரலாற்று உண்மையாகும். இனிமேலும் அதையே செய்வார்கள் என்பதை எச்சரிக்கையோடு எதிர்பாருங்கள்.

No comments:

Post a Comment