Wednesday, May 20, 2009

தமிழ் மக்களை நிர்கதியாக்கிய பிரபாகரனின் பேராட்டமும் அவரது வாழ்கை வரலாறும்

வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கடைசி மகனாக 1954.11.26 ஆண்டு வல்வெட்டிதுறையில் பிறந்தார். பிரபாகரன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் கரிகாலன், துரை, தம்பி என்ற வேறு பெயர்களாளும் அழைக்கப்பட்டார். இவருக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். இவரது சகோதரனும் ஒரு சகோதரியும் டென்மார்க்கிலும் மற்றய சகோதரி கனடாவிலும் வசித்து வருகின்றனர்.

ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பர கல்லுரியில் 9ம் ஆண்டு வரை கல்வி கற்றார். 1984.10.01 சென்னையில் மதிவதனியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு சாள்ஸ் லூகஸ் அன்ரணி,துவாரகா,பாலச்சந்திரன் ஆகிய முன்று பிள்ளைகள் உள்ளனர்.

தனது சிறுவயதிலே பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் மாணவனாக இருக்கும்போது தமிழ் ஆதரவாளாகள் குழுவில் இருந்தார். அதன் பின் 1970 களில் தமிழ் மக்கள் சகல துறைகளிலும் இலங்கை அரசாங்கத்தினால் புறமக்கணிக்கபடுவதாக கூறி தனது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக தமிழ் மாணவர் பேரவையை தொடக்கினார். அதில் அவரது நண்பர்களும் உறவினர்களுமே முக்கிய பங்கு வகித்தனர்.

தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்ட அந்த ஆண்டிலேயே தானும் தனது குழுவினரும் தமிழ் மக்களுக்காக பேராடுவதாக கூறி பஸ் ஒன்றை எரித்ததன் விளைவாக தமிழ் மாணவர் பேரவையை அங்கத்தவர்கள் பெலிசாரால் கைதுசெய்யப்பட்டும் தேடப்பட்டும் வந்தனர். இதன் விளைவாக இந்தியாவுக்கு தப்பி சென்ற பிரபாகரன் 1972 களில் நாடு திரும்பி ஆயுதம் ஏந்துவதன் மூலம்தான் தனது பயங்கரவாத செயற்பாட்டை நிலைநிறுத்தலாம் என எண்ணி 'புதிய தமிழ் புலிகள்' என்ற இயக்கத்தை தொடக்கினார்.

1975ல் பொன்னாலை எனும் இடத்தில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த தமிழ் இனத்தை சேர்ந்த யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை படுகொலை செய்ததன் மூலம் தனது சுயருபத்தை தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் வெளிக்கொண்டுவந்தார். இதுதான் பிரபாகரனின் முதற்படுகொலை என்பது குறிப்பிடதக்கது. அதன்பின் 1975ல் புத்தூர் வங்கிக்குள் நுழைந்து பலலட்சகணக்கான பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டார். இதன் விளைவாக பொலிஸார் புதிய தமிழ் புலிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்பின் 1976 மே மாதம் புதிய தமிழ் புலிகள் இயக்கத்தை தமிழ் ஈழ விடுதலை புலிகளாக பெயர்மாற்றம் செய்ததுடன் தனது இயக்கம் ஒரு கொரில்லா இயக்கம் என்பதை வெளிக்காட்டுவதற்கு புலிச் சின்னத்தை தெரிவு செய்தார்.

1978 களில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் காரணமாக விடுதலை புலிகள் தேடப்பட்டதுடன் அதே ஆண்டு விடுதலை புலிகள் தடைச்சட்டம் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1983 ல் காங்கேசன் துறையில் இராணுவத்தினர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து 1983 ஜீலை கலவரம் உருவாகி 400 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு
பிரபாகரனே வழியமைத்தார். 1983 ஜீலை கலவரத்தை அடிப்படையாக கொண்டு அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இலங்கை பிரச்சினையில் தலையிட்டதுடன் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவ பயிற்சியும் ஆயுதமும் வழங்குவதென முடிவுசெய்தார். 1984 ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டதன் பின்பு பிரதமரான ராஜீவ் காந்தியுடன் விடுதலை புலிகளுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியாமல் போனது. இதன்பின்னர் 1985 ல் போர் நிறத்தம் அறிவிக்கப்பட்டு இந்திய அரசின் முயற்சியில் பேச்சுவார்த்தை நடந்தது. பின்பு பிரபாகரனின் சுயநலத்தால் அது தோல்லியில் முடிந்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கம் பிரபாகரனுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டதது.

1987 ல் இந்திய- இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு சமாதானம் காக்க வந்த இந்திய படையினருடன் பிரபாகரன் பேரிட்டு இறுதியில் இலங்கை தமிழ் மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினார்.

1991ல் தேர்தல் பிரசாரத்தில் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை தற்கொலை குண்டுதாரியை பயன்படுத்தி படுகொலை செய்ததன் மூலம் தனது பெயரை உலகில் உள்ள சகலரும் அறியவைத்தார். இந்திய நீதி மன்றத்தில் இவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு தலைவர் மட்டுமன்றி இலங்கை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ, ஜனாதிபதி வேட்பாளர் காமினி போன்றோரை படுகொலை செய்தததுடன் பல்வேறுபட்ட கொலைமுயற்சிகளிலும் ஈடுபட்டார்.

அத்துடன் தானும் தன்னுடைய சகாக்களும் சுபயோகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களைவிற்று தனது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தமிழ் விடுதலை போராட்டம் என பெயர் சூட்டிக்கொண்டு தமிழ் இனத்தை சேர்ந்த தலைவர்களான உமா மகேஸ்வரன், டெலோ தலைவர் சிறி சபாரத்னம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா, அப்பாபிள்ளை, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், லக்ஷமன் கதிர்காமர் ஆகியோர் மட்டுமன்றி
பல்லாயிரகணக்கான தமிழ் மக்களை ஆண், பெண் வித்தியாசமின்றி படுகொலை செய்தததுடன் தனது பயங்கரவாத போராட்டத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக
தெற்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல்வேறுபட்ட பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடபட்டு தமிழ் மக்களை பாரிய நெருக்கடியில் வீழ்த்தினார். இவரது இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேச நாடுகள் இவரது இயக்கத்தை தடை செய்ததுடன் சர்வதேச பொலிசாரால் (Interpol) தேடப்பட்டும் வந்தார்.

அத்துடன் இவர் ஓர் உண்மையான தமிழ் இன விடுதலைப் போராளியாக இருந்திருந்தால் இலங்கை அரசாஙத்தினால் வழங்கப்பட்ட அனைத்து சந்தர்பங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி இருப்பார். அதற்கு மாறாக இவரது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவிய தரைப்படை, கடற்படை, விமானப்படை பேன்றவற்றை விருத்தி செய்யவும் இவருக்கு தேவையற்றவர்கள் என இவரால் கருதியவர்களை படுகொலை செய்யவும் அரசாஙத்தினால் வழங்கப்பட்ட சந்தர்பங்களை பயன்படுத்தினார். இவ்வாறான செயற்பாடுகள் இவரது பாசிச கொள்கையின் உச்ச தன்மையை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்தியது.

கடந்த 30 வருட காலம் பொது மக்களின் பணத்தில் சுபயோகம் அனுபவித்து விலைமதிப்பற்ற உயிர்களை பலி கொடுத்து இலங்கையின் பொருளாதாரத்தையும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுத்து தமிழ் மக்களை தான் அமைத்த சிறைகூடங்களில் அடைத்து சித்திரவதை புரிந்த பிரபாகரனதும் அவனது சகாக்களினதும் இறப்பானது இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைத்த விமோசனம் என்பதை விட வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com