புலிகளியக்கத்தை மலேசியாவில் தடைசெய்யக் கோருகின்றார் - போகல்லாகம.
புலிகளியக்கத்தை மலேசியாவில் தடைசெய்வது குறித்து பரிசீலிக்குமாறு மலேசிய அரசை இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் போகல்லாக கோரியுள்ளார். ஷங்ரி லா கருத்தரங்கில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த மலேசிய பாதுகாப்பமைச்சர் கலாநிதி. அஹமட் சாஹிட் அவர்களை சந்தித்த போது இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அமைச்சர் போகல்லாகமவுடன் பேசிய மலேசிய பாதுகாப்பு அமைச்சர், இலங்கையில் புலிகளியக்கத்தை தோற்கடித்தமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன் இலங்கை பயங்கரவாத இயக்கமொன்றை தோற்கடித்ததன் மூலம் உலகநாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது என்றார். அத்துடன் அவ்வியக்கம் தொடர்ந்தும் சிறு சிறு சிரமங்களை கொடுக்கக்கூடும் எனவும் கூறினார்.
பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இடம்பெறும் இம்மாநாட்டிற்கு உலகில் உள்ள பல நாடுகளின் இராஜதந்திரிகளும் வருகை தந்துள்ளனர்.
0 comments :
Post a Comment