இலங்கையின் மொத்த கடற்கரை பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் விடுதலைப்புலிகள் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியிருந்தனர். அதை ராணுவம் முறியடித்து விட்டது என கடற்படை தளபதி வசந்த கரன்ன கொடா கூறினார். இலங்கை அரசுக்கு சொந்தமான டி.வி சேனலுக்கு இலங்கை கடற்படை தளபதி வசந்த கரன்ன கொடா அழித்த பேட்டி.
தங்களின் தனிநாடு கோரிக்கையின் நான்காம் கட்ட போரினை கடலில் நடத்துவது என புலிகளின் கடற்புலிகளின் தலைவர் சூசை திட்டமிட்டு இருந்தார். திருகோணமலை துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி அதை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்கு புலிகள் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியிருந்தனர். இலங்கை கடற்கரை பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களது திட்டம்.
குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பம் இலங்கைக்கு வேறு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களை வரவிடாமல் தடுக்க அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அதிபர் ராஜபக்ஸ புலிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து அவர்களை தோற்கடித்து விட்டார்.
இதற்கு முன்னர் இருந்த தலைவர்கள் உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை பாதியில் கைவிட்டனர். ஆனால் ராஜபக்ஸ உறுதியாக இருந்தார். பல்வேறு நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி புலிகளை கடற்படை முறியடித்து விட்டது. புலிகளின் கப்பல்களை கடற்படை அழித்து விட்டது. இதன் மூலம் புலிகள் ஆயுதக்கடத்தலில் ஈடுபடமுடியவில்லை. குறிப்பாக அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் வெளியில் இருந்து வரவில்லை.
2007-08ல் புலிகளின் ஒரு கப்பல்கூட இலங்கை வரவில்லை. இந்த ஆண்டில் அவர்களால் ஒரு சில தாக்குதல்களை மட்டுமே நடத்த முடிந்தது. கடற்படையின் கண்காணிப்புத்தான் இதற்கு காரணம். இலங்கை ராணுவத்தின் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயற்பட்டு புலிகளை ஒழித்தன. இவ்வாறு வசந்த கரன்ன கொடா கூறினார்.
No comments:
Post a Comment