இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன் ஐ.நா. பொதுச்செயலாளர்
ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன் நேற்று இலங்கையில் போர் நடந்த பகுதிகளை விமானத்தில் பறந்தபடி பார்த்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முகாம்களில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் கலங்கி போனேன்.
மக்களை அவர்கள் வசித்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்த முயற்சிக்கிறார்கள். இது அரசின் பொறுப்பு. மக்களை குடியேற்றுவதில் தெளிவான வரையரை தெரிகிறது. இதில் இடைவெளி ஏற்பட்டால் அதை ஐ.நா. சபை நிரப்பும்.
இலங்கையில் 2 கோடி மக்களில் 12.6 சதவிதமே தமிழர்கள் உள்ளனர். அவர்கள் காயங்களை குணப்படுத்த இதுவே உரிய நேரமாகும். இடம் பெயர்ந்துள்ள 3 லட்சம் மக்களின் மனிதாபிமான உதவிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இலங்கை செய்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கழகம் விசாரணை நடத்த இருக்கிறது.
செவ்வாய்க்கிழமை இதன் விசாரணை நடைபெறும். போர் குற்றம் தொடர்பாக அமெரிக்கா பல்வேறு ஆதாரங்களை கொடுத்து உள்ளது.
0 comments :
Post a Comment