இடம்பெற்று முடிந்துள்ள யுத்தத்தில் பங்குபற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்று இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பேசிய இலங்கை இராணுவத்தளபதி புலிகள் தாக்கி விட்டு ஓடுகின்ற செயற்பாடுகளை முன்னெடுப்பர் என தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், நாம் புலிகளிக்கத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைத்தலைமைகளை முற்றாக அழித்தொழித்துள்ளோம். அவர்களால் எதிர்வரும் காலத்தில் ஓர் இராணுவக் கட்டமைப்பை மீழ் கட்டியெழுப்ப முடியாது. ஆனால் சிறு சிறு குழுக்களாக ஒழிந்திருக்க கூடிய ஒரு சிலர் சிறு சிறு தாக்குதல்களை நாடாத்திவிட்டு ஓடுகின்ற தந்திரோபாயங்களை கையாளமுடியும் என தெரிவித்தார்.
அங்கு பேசிய 53ம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், நடந்து முடிந்த யுத்தம் மிகவும் கடினமானதாகவே இருந்தது, ஆனால் நாம் எமது மேலதிகாரிகளின் வழிநடத்தலில் மனவுறுதியுடன் முன்னேறினோம் என்றார்.
58ம் படையணியின் தளபதி பிரிகேடியர் ஷாவேந்திர சில்வா பேசுகையில், யுத்தத்தில் மக்களை எவ்வித பாதிப்புக்களும் இல்லாமல் மீட்டெடுப்பது என்பது மிகவும் சாவாலாகவே இருந்தது, மக்களை மீட்கும் பணியில் முன்னணியில் நின்ற எமது படையினர் பலர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. ஆனால் மக்கள் குறைந்தளவு இழப்புக்ளுடன் மீட்கப்பட்டதென்பது பெரு வெற்றியே என்றார்.
No comments:
Post a Comment