Monday, May 4, 2009

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் டெஸ் பிரவுன் இலங்கை வந்தடைந்துள்ளார்.



பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் டெஸ் பிரவுன் இலங்கை வந்தடைந்துள்ளார். பிரித்தானிய பிரதமரால் இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அந்நியமனத்தை இலங்கை அரசு ஏற்க மறுத்திருந்த நிலையில் அவர் இன்று முதற்தடவையாக இங்கு வந்துள்ளார்.

இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளுடன் பேசவேண்டும், யுத்த சூனியப்பிரதேசத்தினுள் ஐ.நா போன்ற உதவி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்கின்ற சர்வதேச அழுத்தங்கள் தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கோ அன்றில் அழுத்தங்களை பிரயோகிக்கவோ டெஸ் பிரவுனுக்கு சிறிலங்கா அரசினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு குறிப்பிடத்தக்களவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இலங்கைக்கும் இங்கிலாந்திற்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமைக்கான பிரதான காரணம் டெஸ் பிரவுணை விசேட பிரதிநிதியாக இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தமையே எனக் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment