Monday, May 11, 2009

சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றத்தினரின் மாபெரும் கலை கலாச்சார விழா.


சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றத்தினரின் 22ம் ஆண்டு நிறைவில் 2009ம் ஆண்டிற்கான வருடாந்த கலை, கலாச்சார நிகழ்ச்சி நேற்று சூரிச், Gemeindschaftszentrum Affoltern இல் சிறப்பாக நடைபெற்றது. குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் எமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சிறுவர்களின் விநோதஉடைப்போட்டி, பாட்டுக்கு அபிநயம், பின்னணி இசைத்கு ஆடுதல், சிறி சத்தியசாயி கான சபா மாணவர்களின் பாட்டு என பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் புலம்பெயர் வாழ்வு புலருமா? எனும் தலைப்பில் பட்டி மன்றமும் இடம்பெற்றது.

நிகழ்ச்சி முடிவில் கடந்த 26.04.2009 அன்று சிறுவர்களுக்காக தமிழ் காலாச்சார மன்றத்தினரால் நாடாத்தப்பட்ட தமிழ் அறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்களுக்கு சான்றுதல்களும் பரிசில்களும் வழங்கமப்பட்டது.











No comments:

Post a Comment