நியுசிலாந்த தமிழ் வைத்தியர்கள் சங்கம் யுத்த சூனியப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உதவ முன்வருகின்றது.
நியுசிலாந்து தமிழ் வைத்தியர்கள் சங்கம் இலங்கையில் மனிதாபினப் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற சர்வதேச ஸ்தாபனங்களுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் 50000 மக்கள் சிக்கியுள்ள யுத்த சூனியப் பிரதேசத்தில் கடமையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக The New ZealandHerald எனும் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்த தமிழ் வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர். நாகலிங்கம் ராசலிங்கம், இது ஓர் அபாயகரமான முயற்சியாக இருந்த போதிலும் அங்குள்ள மக்களின் அவசர வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்வதாயின் வேறு வழிகள் இல்லை. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோரது குடும்பங்கள் அங்கே சிக்கியுள்ளன.
எமது வைத்தியர்கள் சங்கம் இலங்கை அரச வைத்தியசாலைகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்திருந்தது. ஆனால் அங்குள்ள வைத்தியசாலைகள் தாக்குதலுக்குள்ளானதை அடுத்து அத்தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் இந்த வாரஇறுதியில் சங்க அங்கத்தவர்கள் கூடி எடுப்பர் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment