இலங்கை தமிழர் நிலைமையை ஆய்வு செய்ய சர்வதேச விசாரணை கமிட்டி: மனித உரிமை கவுன்சிலுக்கு ஐ.நா. உத்தரவு
வாஷிங்டன், மே.9- இலங்கையில் பரிதவிக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக சர்வதேச விசாரணை கமிட்டி அமைக்குமாறு மனித உரிமை கவுன்சிலுக்கு ஐ.நா. வல்லுனர் குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா. சபையின் உடல் நல உரிமைகள் கவுன்சில் தலைவர் பிலிப் ஆல்ஸ்டன், உணவுகள் உரிமை தலைவர் ஆனந்த் குரோவர், குடிநீர் உரிமை தலைவர் ஆலிவர், அடிப்படை சுகாதார உரிமைகள் கேதரின் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித துன்புறுத்தல்கள் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்க கூடியவையாக உள்ளன. இவ்வளவு மக்கள் பலியாகி விட்டனர் என்று கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு படுகொலை தொடருகிறது. பொறுப்புணர்ச்சியும், வெளிப்படையான தன்மையும் இல்லாததால் உண்மை நிலவரம் தெரியவில்லை. கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு நம்பும்படியான சரியான காரணம் எதுவும் கிடையாது. போர் பகுதிக்குள் சர்வதேச கண்காணிப்பு குழு மற்றும் பத்திரிகையாளர்களை இதுவரை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது. எனவே, கடந்த சில மாதங்களாக நடந்த சம்பவங்கள் குறித்த ஆதாரங்களை திரட்டவும், தற்போது நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் உடனடியாக ஒரு சர்வதேச கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 9.5.
நன்றி தினத்தந்தி
0 comments :
Post a Comment