இடைத்தங்கல் முகாமில் பொன்தியாகம் : மக்கள் தர்ம அடி.
புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராகவும் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வந்தவருமான பொன் தியாகம் என்பவர் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மக்களோடு மக்களாக அரசகட்டுப்பாட்டுப் பகுதியினுள் வந்துள்ள அவர் தன்னை உருமறைத்துக் கொள்வதற்காக தாடி, மீசை, தலைமுடி என்பவற்றை வளர்த்துக்கொண்டு மக்களினுள் மறைந்திருந்துள்ளார்.
அவரை இனம் கண்டு கொண்ட மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். புலிகளியக்கத்தில் இருந்து மரணிப்பவர்களின் உடலங்களை பெற்றோர் உறவினர்கள் உரிமைகோரிச் செல்லும்போது அம்மக்களின் உரிமைகள் மாவீரர் பணிமனைக்கு பொறுப்பாளரான பொன் தியாகத்தினால் மறுக்கப்பட்டமையை அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment