பிரபாகரனின் பெற்றோருக்கு உறவினர்களுடன் சேர அனுமதியில்லை.
பிரபாகரனின் பெற்றோர் வவுனியாவில் உள்ள அகதிகள்முகாம் ஒன்றில் தனியாக தங்கவைக்கபட்டிருப்பதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்கவைக்கப்படடுள்ள முகாம் ஏனைய முகாம்களையும் விட சகலவகையான வசதிகளையும் கொண்டதாக காணப்படுகின்றது என தெரிவித்த இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார,
பிரபாகரனின் பெற்றோருடன் போரில் உயிரிழந்த ஏனைய புலி உறுப்பினர்களின் குடும்பத்தவர்களும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அவர்களது உறவினர்களும் தங்கியுள்ளனர். அத்துடன்; இலங்கை அரசாங்கம் முதியோர்களை அவர்களது உறவினர்களுடன் சேருவதற்கு அனுமதி வழங்யுள்ளது. ஆனால் பிரபாகரனின் பெற்றோரின் பாதுகாப்பு கருதி அவர்களை அவர்களது உறவினர்களுடன் செல்வதற்கு அனுமதி வழங்கியப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment