அம்பாறையில் நான்கு புலிகள் பலி. நால்வர் உயிருடன் பிடிபட்டுள்ளார்கள் என்கின்றாராம் அம்பாறை மாவட்டத் தளபதி ராம்.
பொத்துவில் ஆலங்குளம் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் நேற்றுப் பிற்பகல் 6.30 மணியளவில் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் அம்பாறை மாவட்ட காடுகளில் இயங்கி வந்த நான்கு புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் நால்வரதும் உடலங்கள் பொத்துவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்பாறை மாவட்ட காடுகளில் இயங்கிவரும் புலிகள் உணவுப் பொருட்களைச் சேகரிக்கச் சென்றபோதே தாக்குதலுக்கு உள்ளானதாக புலிகளின் அம்பாறை மாவட்ட இராணுவத்தளபதி ராம் இற்கு நெருக்கமானவர்கள் இலங்கைநெற் இற்கு தெரிவித்தனர். அவர்களின் தகவல்ப்படி 8 பேர் கொண்ட புலிகளின் குழு ஒன்று இரு பிரிவுகளாக உணவுப் பொருடக்களைச் சேகரிக்கச் சென்றதாகவும் அவர்களில் இந்திரன் தலைமையிலான நால்வர் கொண்ட குழு உயிருடன் பிடிபட்டிருக்கவேண்டும் அல்லது அடர்ந்த காட்டுப்பகுதிகளில் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கவேண்டும் என நம்பப்படுகின்றது.
இவர்கள் எண்மரும் தளம் திரும்பாததையிட்ட ராம் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்கள் தளம் திரும்பாவிடின் தான் இலங்கையில் சிங்கள இனத்தையே ஒழித்துக்கட்டப்போவதாக தொலைபேசியில் சத்தமிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment