Sunday, May 10, 2009

உலகிலேயே சிறந்த இராணுவத்தை இலங்கை கொண்டுள்ளது. பாதுகாப்புச் செயலர்.



உலகிலேயே ஒழுக்க சீலர்களான சிறந்த இராணுவத்தை இலங்கை கொண்டுள்ளது என இலங்கைப் பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு கடந்த 7ம் திகதி வழங்கிய நேர்கணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஓழுக்கம் , மனிதவுரிமைகளைப் பேணுதல் , சிவில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணல் போன்றவற்றில் எமது படையினர் சிறந்து விளங்குகின்றனர். உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாதத்துடன் மோதி மாபெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகையை எமது படையினர் மீட்டுள்ளனர். மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதில் எமது படை உலகெங்கும் உள்ள ராணுவத்தினருக்கு பாடம் கற்பித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com