ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் பேரணி: ஐ.நா. தலையிட பெற்றோர் கோரிக்கை
கடந்த சில வாரங்களாகவே இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த கோரி மெல்பர்ன் நகரில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் மாணவர் தேசிய யூனியன் ஆகிய அமைப்புகள் சார்பாக பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் குப்தா,
"தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எளிதாக தாக்கும் அளவுக்கு இந்திய மாணவர்கள் கிள்ளுக்கீரை அல்ல என்பதை இந்த பேரணி மூலமாக நிரூபித்து இருக்கிறோம். காந்திய வழியில் தொடர்ந்து போராடுவோம்'' என்றார். அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களுடைய பிள்ளைகளின் நிலைமை குறித்து இந்திய பெற்றோர் கவலையடைந்துள்ளனர். ஒரிசாவை சேர்ந்த பெற்றோர் கூட்டமைப்பினர், `ஆஸ்திரேலியா மட்டுமன்றி இந்திய மாணவர்கள் சிறப்பாக செயல்படும் பிற நாடுகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவே கருதுகிறோம். எனவே, இத்தகைய தாக்குதல்களை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை உடனடியாக தலையிட வேண்டும்' என்று தெரிவித்தனர்.
நன்றி தினமணி
0 comments :
Post a Comment