இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்: இந்திய தூதர்
ஆஸ்திரேலியா நாட்டில் இந்திய மாணவர்களை குறிவைத்து இன வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வார இறுதியில், ஆந்திராவைச் சேர்ந்த ஷ்ராவன் குமார் என்ற மாணவர், கத்தியால் குத்தப்பட்டார். அவரது நண்பர்கள் 3 பேரும் தாக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் `கோமா' நிலையில் இருக்கும் ஷ்ராவன் குமார், உயிருக்குப் போராடி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை ராஜேஷ் குமார் (வயது 25) என்ற இந்திய மாணவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடர் தாக்குதல்களால், இந்தியாவில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் சுஜாதா சிங், இன்று விக்டோரியா மாகாண கவர்னர் ஜான் பிரம்பி, போலீஸ் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டார். அப்போது, இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், மீண்டும் இதுபோன்று நடக்காத வகையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி தினத்தந்தி
0 comments :
Post a Comment