Friday, May 1, 2009

ஒற்றுமைக்காக இணைந்து போராடுவோம் -அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே!! (புளொட் துண்டுப்பிரசுரம்..)



அடக்குமுறைகளும் சுரண்டல்களும் உலகின் அனைத்தப் பாகங்களிலுமிருந்து ஒழிக்கப்பட நீதியான போராட்டத்தை முன்னெடுப்போம். கடும் உழைப்பிற்கு மத்தியில் போராடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் விடிவிற்காய் ஆதரவு கொடுப்போம். சுதந்திர வர்த்தக வலையத்தில் உரிமைக்காகப் போராடும் போராட்ட உரிமை மறுக்கப் பட்டிருக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பதோடு நாட்டில் நிலவும் யுத்த சூழ்நிலையையும் மக்களின் உத்தரவாதப்படுத்தாத வாழ்க்கை முறையையும் சாதகமாகக் கொண்டு அரசின் தனியார் மயப்படுத்தும் அரசியல் மூலம் நாட்டை பகுதி பகுதியாக வெளிநாடுகட்கு விற்கும் அரசியலைத் தடுப்போம்.

யுத்தத்தினால் உருவாக்கப்பட்ட அகதிளைப் பாதுகாக்கும் சமாதான வாழ்க்கை உத்தரவாதம் எமக்க வேண்டியதல்ல. நாம் பேராடுவது மனிதனை மனிதன் (இனத்தை இனம்) நசுக்காமல் வாழும் வாழ்க்கை உத்தரவாதத்துக்காகவே!

எமது போராட்டம் எமது சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளிக்கும் சமுதாயத்தை வலுவூட்டி உருவாக்கவும் வேண்டும். அதேநேரம் இலங்கைக்கெதிரான ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்களும் நெருக்குவாரங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

ஆவேசமும் ஆத்திரமூட்டுவதுமான யுத்தங்கள் ஈராக், பலத்தீனம் உட்பட நிறுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உரிமைக்காக போராடும் உரிமை உடையவர்களாதலால் அரசியற் கைதிகள் விடுதலையாக்கப்படவும் அமைக்கப்பட்டுள்ள பயங்கரமான சித்திரவதைச் சிறைக்கூடங்கள் அகற்றப்படவும் குரல்கொடுப்போம்.

புலிகள் அமைப்பல்லாதோரை கொடுமைக்குட்படுத்தும் புலிகள் அமைப்பினர் எவரது கோரிக்கைகளையும் கருத்திற் கொள்வதில்லை. ஐக்கிய நாடுகள் மனிதக்காப்பகம், மற்றும் பல உலக மனிதஉரிமை அமைப்புக்கள் பலதடவை புலிகளின் பழிவாங்கும் மனித வதைகளையும் இதுபோன்ற கையாளுகைகளைகளையும் நிறுத்தக் கோரிய போதும் இக்கோரிக்கைகள் தொடர்ந்தும் மீறப்பட்டுள்ளன.

வன்னிவாழ் மக்கள் விடுதலைப்புலிகளாலேயே ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

• விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கைமக்களின் ஏற்பாட்டிலான விசாரணைக்குழுவின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

• விடுதலைப் போராட்டப் போராளிகட்கான நல்வாழ்வுத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

• ஏகாதிபத்தியத்தின் அனத்துத் தாக்குதல்களினின்றும் முன்னைநாள் காலணித்துவ நாடான இலங்கை பாதுகாக்கப்பட வேண்டும்.

• இலங்கையை காலணித்துவ ஆட்சிக்குட்படுத்தி சீர்குலைத்த வல்லாதிக்க நாடுகள் அதன் மீள் கட்டமைப்பிற்கான நஷ்டஈடு வழங்க வேண்டும்.

• ஏகாதிபத்திய நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் எல்லைகடந்து தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

• இலங்கை அரசு இலங்கையில் உள்ள சகல அரசியல் மற்றும் பொது அமைப்புக்களையும் அதன் உறுப்பினர்களையும் சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் நடாத்த வேண்டும்

• புலிகள் மனிதகேடயங்களாக வன்னியில் தடுத்து வைத்துள்ள மக்களை உடனடியாக எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்

எமக்கு வேண்டும் உண்மையான அமைதி, எமக்கு வேண்டும் உண்மையான விடுதலை.
இலங்கைத் தமிழ், சிங்கள, முஸ்லிம் பாட்டாளிவர்க்க மக்களே நாம் ஒன்றிணைவோம்! ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக போரிட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிக்காக அனைத்து மக்களுடனும் ஒன்றிணைவோம்.

சுவிஸ் நாட்டிலிருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புவதை நிறுத்து! அனைவருக்குமுண்டு வாழ்விடவுரிமை. உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - புளொட்! ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி- டிபிஎல்எப்! (Postfach 157, 3423 Erziegen, Switzerland)









No comments:

Post a Comment