Monday, May 4, 2009

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு

இலங்கையின் வடக்கு மோதல்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சென்றுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கை அரசியல்வாதிகளுடனும்இ சமூகப் பெரியவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

பிரிட்டனின் பல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்ற இந்த குழுவில் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஷ் பிரவுணும் இடம்பெறுகிறார்.

இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதியாக இவரை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் அறிவித்திருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை முன்னதாகவே ஏற்க மறுத்து விட்டது. தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாத்திரந்தான் அவர் இந்தக் குழுவில் இடம்பெறுகிறார்.

5 பேரைக் கொண்ட இந்த குழுவினர் வடக்கில் உள்ள அகதிகளின் முகாம்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்வார்கள் என்றும்இ அது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதரகம் கூறியுள்ளது.

இந்த குழுவில் இடம்பெறுகின்ற பிரித்தானிய கன்சேர்வேட்டிவ் (பழமைவாத கட்சியின்) உறுப்பினரான ஜோண் பேர்க்கோவ் அவர்கள்இ இந்த குழுவின் உறுப்பினர்கள் தம்மை இலங்கையின் நண்பர்களாகவே கருதுவதாக கூறியிருக்கிறார்.

ஆனால்இ பிரிட்டன் மற்றும் ஏனைய மேற்கு நாடுகள் குறித்து இலங்கை அரசாங்க வட்டாரங்கள் அண்மையில் வெளியிடும் கருத்துக்கள் அந்த நாடுகளுக்கு எதிரானவையாக இருக்கின்றன.

கடந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுஇ அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் குஷ்னர் ஆகியோரின் கோரிக்கையை விடுதலைப்புலிகள் பாராட்டியுள்ளனர்.
Thanks BBC

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com