மலேசிய வைத்திய சேவைக் குழுவொன்று இடைத்தங்கல் முகாம்களில்.
Mercy என்ற மலேசிய வைத்திய நிறுவனம் நடமாடும் நான்கு வைத்திய சேவை நிலையங்களை வவுனியாவில் அமைத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சேவை செய்கின்றது. இது செட்டிகுளத்திலுள்ள மெனிக்பாமில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இடைத்தங்கல் முகாம்களில் காணப்படுகின்ற வைத்திய சேவைக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இலங்கை சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுதலுக்கிணங்க இந்த வைத்திய குழு இலங்கை வந்துளள்து. இது 100000 இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவை வழங்க போதுமான வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த சேவைப் பணியகம் போதுமான சிகிச்சை உபகரணங்களோடும் தளபாடங்களோடும் அமையப் பெற்றுள்ளது. இதிலே இலங்கை வைத்தியநிபுணர்கள் சத்திரசிகிச்சை போன்ற அத்தியாசிய சேவைகளை ஆற்றுவர். மலேசிய அரசு மேலும் நிதிகளைச் சேகரித்து தமது இரண்டாவது வேலைத்திட்டத்தையும் நிகழ்த்த உள்ளனர் என்று Mercy அமைப்பின் அதிகாரி Elliane Arriany Mustapha கூறினார். தற்பொழுதே பிறந்த குழந்தைகளோடு நூற்றுக்கணக்கான இளந்தாய்மார் கொதிக்கும் வெய்யிலில் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
0 comments :
Post a Comment