மேற்குலக நாடுகள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரணை செய்துவிட்டு இலங்கை விடயங்கள் தொடர்பாக பேசவாருங்கள்
இலங்கை இராணுவ வெற்றியின் பின்னால், போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அது தொடர்பாக மேற்குலக நாடுகள் ஆராய இருக்கின்றன எனவும் என்.டி.வி நிருபர் நிட்டன் கோக்லி பாதுகாப்பு செயளாளர் கோத்தபாய ராஜபக்ஷ வுடனான நேர்காணலின் போது கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
உலகில் எல்லா நாடுகளிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஓப்பிடும் போது இலங்கை இராணுவம் ஆரம்பத்திலிருந்து இறுதிரை பொதுமக்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மிகவும் சாதுர்யமான முறையில் அம்மக்களை காப்பாற்றியே இந்த வெற்றியை அடைந்துள்ளது என தெரிவித்த அவர் ஜக்கிய நாடுகள், மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழு என்பன இலங்கை இராணுவம் தொடர்பான போர் குற்றங்களை ஆராய முன்பு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் போர் குற்றங்கள் தொடர்பாக ஆராய்;ந்து விட்டே இலங்கை விடயம் தொடர்பாக பேச வேண்டும் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment