Monday, May 11, 2009

ஐ.நா சபையினால் இலங்கை அரசிற்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது.


ஐ.நா சபை அண்மையில் வெளியிட்டுள்ள கருத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் யுத்த சூனியப் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா கொழும்பு அலுவலகம் தெரிவித்திருந்தமை தொடர்பாகவே அவர் மேற்கண்டவாறு தொவித்துள்ளார்.

ஐ.நா கொழும்பு அலுவலகத்தின் பேச்சாளர் ஹோர்டன் வைஸ் அவர்கள் , ஆயிரத்கணக்கான மக்கள் சிக்கியுள்ள சிறியதோர் ஒடுங்கிய கரையோரப் பிரதேசத்தினுள் இடம்பெற்ற தாக்குதலில் இரத்தக்களறி ஏற்பட்டுள்ளது. அங்கு பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் உயரிழக்க நேரிட்டுள்ளது. ஆதில் 100க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என அவர் இன்று காலை தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment