Monday, May 18, 2009

பிரபாகரனது உடல் மரபணு மற்றும் நீதிமன்ற பரிசோதனைகளுக்குச் செல்கின்றது.

படையினரது முற்றுகை ஒன்றை உடைத்துக்கொண்டு வெளியேற முற்பட்ட பிரபாகரன் மற்றும் அவரது இரு முக்கிய தளபதிகள் நேற்று அதிகாலை படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். பிரபாகரன் குழுவினருக்கும் படையினருக்கும் இடம்பெற்ற இரு மணிநேர அதி உக்கிர துப்பாக்கிச் சமரின் பின்பு அவர் பயணித்த இரும்பு கவசமிடப்பட்ட வாகனம் ஆர்பிஜி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாகனம் முற்றாக வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது.

அவ்வாகனத்தில் இருந்தவர்களதும் பிரபாகரனதும் சடலங்கள் முற்றாக கருகியுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட 300 உடலங்களில் பிரபாகரனது உடல் என சந்தேகிக்கப்படும் உடலங்களுடன் 40 உடலங்கள் அனுராதபுரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அச்சடலங்கள் மரபணு மற்றும் நீதிமன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

அனுராதபுர மஜிஸ்ரேட் சாமரி தனன்சூரிய மரபணு மற்றும் நீதிமன்ற பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். பிரேதபரிசோதனை அனுராதபுர வைத்தியசாலையில் இடம்பெறும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com