Saturday, May 2, 2009

புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் -கிழக்கான் ஆதம்-

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து – ஞானம்மா
அலைவார் வெகுகோடி
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே- ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி
களத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் – ஞானம்மா
கலங்கி அழுதாரடி
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ – ஞானம்மா
நலித்தே அழுவாரடி (புண்ணாக்குச் சித்தர் - சித்தர் பாடல் தொகுப்பிலிருந்து)

இன்று விடுதலைப் புலிகளின் புகலிடமாகத் திகழும் புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களின் மூளைகளுக்கு பாசிச ஆய்வாளர்களினாலும் பாசிச உ(பு)ணர்ச்சிக் கவிஞர்களாலும் உற்புகுத்தப்பட்டுள்ள சொல்லியல் வாதம்தான் “மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள்” என்ற கோஷமாகும்.

அளவையியலில் (Logic) ஒரு விதியுண்டு அதாவது “எல்லாம்” என்ற சொல் பாவிக்கப்பட்டால் அதில் அது குறிக்கும் விடயத்தின் முழுமையும் உள்ளடக்கப்படாது என்பதுடன் அந்த வாதம் வலிமை குறைந்ததாக இருக்கும் என்பதுவாகும் அது. ஆனால் இந்த புலிகளின் கனாக்காரர்களால் அவிழ்த்துவிடப்பட்டுள்ள மேற்குறித்த வசனம் அதையும் தாண்டிவிட்டது ஒரு சிற்றளவைக் குறிக்க ஒரு முழுமையை பயன்படுத்துகின்றனர்.

உண்மையில் அதைக் கூறிக்கொள்பவர்கள் இப்படிக் கூறியிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம் “நாங்கள்தான் புலிகள் புலிகள்தான் நாங்கள்” என்று அப்படிக் கூறிச் சிக்கலில் மாட்டிக்கொள்ள தாயாராக இல்லாத வீராதி வீர்ர்களும் தைரியசாலிகளும் பொதுவாக கூறி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மக்களை மிரட்டிப் பணம் சம்பாதிக்கவும் புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் எனக் கூறிக் கொள்கின்றனர்.

சரி அவர்களின் கருத்தை நாம் ஏற்றுக்கொண்டு உலகத் தமிழர் என்ற பரப்பில் புலிகளின் ஆதரவுத் தளம் என்ன என்று ஆராய்வோமாயின் அது நமக்கு நன்றாகப் புலப்படும்.

முதலில் மொத்தமாக தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் உலகம் முழுமைக்கும் வாழும் மக்களின் பரப்பை நோக்குவோமாயின் அது 77,000,000 பேராகும் இதில் இந்தியாவில் 60,793,814 பேரும்(2001), இலங்கையில் 3,092,676 பேரும்(2001), மலேசியாவில் 2,100,000 பேரும்(2007), கனடாவில் 200,000 பேரும்(2007), சிங்கப்பூர் 111,000 பேரும்(1993) வாழ்ந்து வருகின்றனர்.

இதை மதரீதியாக நோக்குவோமாயின் 88% ஹிந்துக்களும், 06% இஸ்லாமியர்களும், 5.5% கிறிஸ்தவர்களுமாக காணப்படுகின்றனர்.

முதலில் உலகில்வாழும் தமிழ்பேசக் கூடியவர்களில் இந்தியத் தமிழர்கள் என்பவர்கள் எப்போதும் புலிகளுக்களின் விசுவாசிகள் அல்லர். இவர்கள் இந்தியா உற்பட பரம்பரை பரம்பரையாக எந்தத் தேசத்தில் வாழ்ந்துவந்தாலும் மலேசியா, சிங்கப்பூர், மொருஸியஸ் உற்பட அவர்கள் அந்த நாட்டுப் பிரஜைகளாகவும் அவர்கள் தங்களின் அமைதியான சந்தோசமான வாழ்வில் மட்டுமே அக்கறை காட்டுபவர்கள் மட்டுமே.

இதை தமிழ் நாட்டில் மட்டும் கோடிக்கணக்கில் தமிழர்களிருக்க வெறும் சில ஆயிரங்கள் மட்டும் புலிகளுக்கு சார்பான ஆர்பாட்டங்களில் கலந்து கொள்வதை வைத்து உணர்ந்து கொள்ளலாம். அங்கே தமிழ் சில ஊடகங்களே புலிகளின் பணத்திற்காக களத்தில் புலிகளின் சர்வதேச பிரதிநிதிகளுடன் சேர்ந்து போராடி சில ஆயிரங்களை ஓட்டு மொத்த தமிழினமாக காட்ட முற்படுகின்றன.

இதனை புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் அந்தந்த்த் தேசங்களுக்குச் சென்று பல முகாம்களை பல நாட்களாக நடத்தி கண்ணீர்விட்டு அழுது புலிகள் மக்கள் மீது புரிகின்ற கொடுமைகளை இலங்கை இராணுவம் தமிழ் மக்கள்மீது புரிவதாக கூறி பல இலச்சங்களைச் செலவுசெய்து பல மாணவ அமைப்புத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை பணத்திற்கு வாங்கி அவர்களினூடாக அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புக்களை அழைத்து ஒருநாள் கொடிபிடித்து கொஷம் போட வைப்பர் வந்து வாங்கிய பணத்திற்கு ஒரு தரம் வீதியில் கொடி பிடித்துவிட்டுப் அவர்களும் திரும்பிவிடுவார்கள்.

உடனே அந்த இடைவெளியில் அதை ஏற்பாடு செய்தவர்கள் புலம்பெயர் தேசங்களுக்கு மீள்வர் அவர்களை தீபமும் ,ஜீடிவியும் பேட்டிகண்டு உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து விட்டதாக பரப்புரை செய்யும் இதை பார்த்து புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்கள் மகளுக்கு திருமணத்துக்கு சேர்த்த பணத்தையும் வங்கி கடனடைக்க சேர்த்த பணத்தையும் உடன் அவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பர். அந்த பணத்துடன் அடுத்த நாளே உடன் அடுத்த நாட்டுக்கு அந்த கலக்சன்காரர்கள் கிளம்பி விடுவார்கள். அதற்குள் அவர்களை பேட்டியெடுக்கும் போது நிருபர் கேட்பார் “நீங்கள் எவ்வளவு நாள் அந்த நாட்டில் தங்கியிருந்தீர்கள்?” உடன் அவர் பெருமையாக “மூன்று மாதங்கள்” என்று பதில் சொல்வார். ஆனால் யாரும் “மூன்று மாதங்கள் தங்கியிருக்க வேண்டியிருந்ததா ஒன்றுபட்ட உலகத்தமிழர்களை வைத்து ஒரு நாள் போராட்டம் நடத்த” என கேட்பது கிடையாது கேட்டால் அவன் துரோகி! காரணம் பணம் கொடுக்கும் மக்கள் பார்வையாளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும் அதுதான் பு(க)லி ஜனநாயகம்.

இதை நாம் எழுதினாலும் நாமும் துரோகி உடன் ஒரு நண்பர் பின்னூட்டமெழுதுவார் “ஐயா! நீ யாருக்குப் பிறந்த!!” என்று. காரணம் அவர்களைப் போல ஈனப்பிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் அவா! என்ன செய்ய தப்பிப்தவறி தன்மானத்துடன் சுதந்திரனாக பிறந்ததால் பிரபாகரனின் அடிமைகளுக்கு சுதந்திரம் தேடிப் போராட வேண்டியுள்ளது பேனாவால்.

என்ன செய்ய எங்களைக்(முஸ்லீம்களை) குட்டிக்! குட்டியே! மண்டனாகி விட்டார்கள் அவர்கள் இன்று அவர்களுக்கும் நாங்கள் புத்திபோதிபோதிக்க வேண்டியுள்ளது காரணம் “விசரன்” என்றாலும் அவனும் என் சகோதரன்.

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்கு உபதேசம் – ஞானம்மா
சொன்னால் வருமோசம்

இவ்வாறு புலிகள் பிரச்சார பீரங்கிகள் ஒன்றுபட்ட புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட உலக தமிழினத்தை மூன்று மாத பிரச்சாரத்திலும் பல இலச்சங்கள் செலவிலும் ஒரு நாள் போராட்டத்துக்கு அழைத்துக்காட்ட உலகில் மற்றைய இனத்தவர்களோ ஒரு மனிநேர ஏற்பாட்டில் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்திக் வெற்றி பெற்றுக்காட்டுகின்றனர்.

இங்கு இன்னோர் விடயத்தையும் நாம் நோக்க வேண்டும் பர்மாவில்(மியன்மார்) புயலடித்தபோது அங்கு உள்ள இந்தியத் தமிழ் மக்கள் இந்தியர்களை விட இலங்கைத் தமிழர்களைதான் அதிகமாக ஆதரிப்பதாக கூறி அங்கு அழிந்த இரண்டு தமிழ் கிராமங்களில் ஒன்றையேனும் ஈழத்தமிழர்களின் செலவில் மீள் கட்டுமாணம் செய்யவேண்டுமெனக் கூறி பல கோடிகள் புலம்பெயர் தேசங்களிலிருந்து சுருட்டப்பட்டது. அந்தப் பணத்திற்கு என்ன ஆச்சு என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை அத்துடன் இந்திட்டம் முன்னெடுக்கப் பட்டதற்கு பிரதான காரணம் புலிகளின் தலைவர் இலங்கை அரசிடம் தோற்றுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்பட்டால் ஒழிந்து கொள்வதற்கான சொகுது பங்கர் அமைப்பதற்காக இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எனது யாழ்பாண நண்பரொருவர் அந்நாளில் என்னிடம் கூறியிருந்தார்.

உலத்தமிழர்களின் பரப்பில் இந்தியத் தமிழர்கள் 90 விழுக்காடு இருக்க புலிகளுக்கு ஆதரவான இந்தியத் தமிழர்கள் சுமார் 0.10 விழுக்காடு மட்டுமேயாகும் ஆகவே அவர்கள் தாங்கள் வாங்குகின்ற கூலிக்கு குறைவாக வேலைசெய்துவிட்டு நாசுக்காக கழன்டுவிடுகிறார்கள்.

இவர்களின் ஆதரவை வைத்துக் கொண்டுதான் புலிகளும் அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகளும் தமிழ் நாட்டில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அரசியல் தலைவர்களை எள்ளிநகையாடுவதும் அவர்களை துரோகிகளாக காட்ட இறுவெட்டுக்கள் வெளியிடுவதும் மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என முழங்குவதுமாகும்.

இதை எழுதும் போது ஒரு கதை ஞாபகம் வருகிறது ஒரு பெரிய காட்டில் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது அது ஒரு நாள் வேடனொருவன் கள்ளை மரத்தின் கீழ் வைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருக்க அதை எடுத்துப் பருகிவிட்டது உடன் போதை தலைக்கேறி காட்டில் மேய்ந்துகொண்டிருந்த மான், மாடு, ஆடுகளிடமெல்லாம் சென்று “இந்தக் காட்டுக்கு யாரு ராஜா நான்தானே” என்று கேட்டது. இதன் நிலையை உணர்ந்த அந்த மிருகங்கள் “நீங்கள்தான் ராஜா போய் வாருங்கள்” என்று கூறின. மிகவும் சந்தோசமடைந்த குரங்கு காட்டில் ஒரு மானை வேட்டையாடிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிங்கத்திடம் போய் சேதியைக் கேட்டது உடன் சிங்கமும் “நீங்கள்தான் மகா ராஜா சென்று வாருங்கள்” என்று கூறியது சிங்கம் அவ்வாறு கூறியதைக் கேட்ட குரங்வுக்கு தலைகால் கொள்ளவில்லை.... உடனே மரத்தை தனது தும்பிக்கையால் உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த யானையின் வாலைப் பிடித்து அதன் காதருகில் வந்து யானையிடம் “காட்டுக்கு யார் ராஜா நான்தானே” என்று அதன் காதில் கேட்டது இதை உணர்ந்து கொள்ள முடியாமல்போன யானை காதிலேதோ உற்புக முற்படுகின்றது என நினைத்து தனது தும்பிக்கையால் குரங்கை பிடித்து ஒரு சுழற்றுச் சுழற்றி.. தனது காலினால் உதைத்து வீசி விட்டது.

மிகவும் தூரத்தில் சென்று விழுந்த குரங்காருக்கு போதை அத்துடன் தெளிந்து விடவே “தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்வது தானே, ஏன் தேவையில்லாத வேலை பார்ப்பது” எனக் கூறிக் கொண்டு குரங்கு தாவி மறைந்தது

இன்று புலிகளின் நிலையும் அவர்களின் ஆதரவுத் தளமும் இவ்வாறுதான் உள்ளது இந்தியா சர்வதேசமும் புலிகளுக்கு காட்சிய கருணையை அவர்களின் பலம் என்று நினைத்துக் கொண்டு தான்தோன்றித் தனமாக செயற்பட்டதால் இந்தியா என்ற பூதத்தை பகைத்துக் கொண்டதுடன் அவர்களின் இராணுவத்தை தோற்கடித்தாக கதையும் விட்டுவிட்டு இன்று தன்னிலை அரசால் உணர்த்தப்பட்டவுடன் “ஆதரவளிக்காவிட்டால் பரவாயில்லை இலங்கை அரசுக்கு உதவிசெய்யவேண்டாம்” என்று இந்தியாவிடம் பிச்சை கேட்க வேண்டியுள்ளது. இதுவும் அந்தக் குரங்கின் நிலைதான்.

இந்தியாவையும் தமிழ் நாட்டையும் பொருத்தவரை இவர்களை ஆதரிக்கும் 0.10% மானவர்களைக் கொண்டு இவர்கள் நடத்தும் போராட்டங்களில் எதுவும் நடக்கப் போவதில்லை அங்கே இலங்கையைப் போன்றே மத்தியிலும் மானிலத்திலும் இரண்டு கட்சிகள்தான் மாறிமாறி ஆட்சி பீடமேறப் போகிறார்கள் அவர்கள் செய்வதை இவர்கள் ஆட்சியிலிருக்கும் போது குறை கூறுவதும் இவர்கள் அதை மாறி அவர்கள் ஆட்சிலேறிவிட்டால் சொல்லுவதும் அரசியல். அவைகளை நம்பி புலிகளால் ஆட்சி மாறப்போகிறது என்று புலிகளின் ஆய்வாளர்கள் விடும் கதைகள் வெறும் “பனங்காய் விழ காகம் பறந்த கதை” காகிதாலியப் போலியாகும்.

அடுத்து புலிகளின் புலம்பெயர்ந்து வாழும் (SriLankan Tamil Diaspora) பற்றிப் பார்ப்போம். மொத்தமாக உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் அண்ணளவாக பத்து இலட்சம் பேர்கள் இருக்கும்.

கனடா நாலு இலச்சம்(2008) பிரசைகள் ஐக்கிய இராச்சியம் மூன்று இலட்சம் பிரசைகள் ஐக்கிய அமெரிக்கா ஒரு இலச்சம் பிரசைகள் ஜெர்மனி ஆறுபதாயிரம் பிரசைகள் பிரான்ஸ் அறுபதாயிரம் பிரசைகள் சுவிட்சர்லாந்து முற்பத்தையாயிரம் பிரசைகள் இத்தாலி ஒரு இலச்சம் அவுஸ்ரேலியா எண்பதுநாயிரம் பிரசைகள் நோர்வே பனிரென்டாயிரம் பிரசைகள் டென்மார்க் பத்தாயிரம் பிரசைகள் சுவீடன் பத்தாயிரம் பிரசைகள் என்ற கணக்கில் தமிழர்கள் வாழ்கின்றனர் (இந்த மொத்த சனத்தொகைக்குள் இந்தியத் தமிழர்களும் உள்ளடக்கப் பட்டுள்ளனர்)

இதில் நிஜமாக புலிகளை ஆதரிக்கின்ற மக்கள் ஆகக் கூடியது வெறும் இரண்டு இலட்சத்திற்கு குறைவானவர்கள் மட்டுமே இதற்கு ஆதாரமாக புலிகளால் லண்டனில் அண்மையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை நோக்கும்போது தெரிந்து கொள்ளலாம் காரணம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சகல புலம்பெயர் தேசங்களிலும் இருந்தும் சுமார் ஒரு இலட்சம் மக்களை (லண்டனிலுள்ள நடுநிலைபேணும் சர்வதேச நிறுவனங்களின் கணக்கின் படி) மட்டுமே இவர்களால் கூட்டுச் சேர்க்க முடிந்தது. இதிலும் பாதிப்பேர் புலிகளின் வற்புறுத்தலுக்குப் பயந்து இதில் கலந்து கொண்டவர்கள் என்பது வேறு கதை.

புலம்பெயர் மக்கள் இத்தகைய ஆர்பாட்டங்களில் இஸ்டம் இல்லாவிட்டாலும் கலந்து கொள்வதற்கு பல தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன தங்கள் சொந்தங்கள் வன்னியில் புலிகளால் சிறைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களை மீட்கவேண்டிய தேவை கருதியும் புலிகளினால் அவர்கள் பழிவாங்கப்படுவதை தவிர்ப்பதற்காகவுமே அவர்களில் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்கின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் பயமுறுத்தி பணம் பறித்து புலிகளுக்கு விசுவாசிகளாக செயற்படுபவர்களின் நிலை தற்போது ஆட்டங்கண்டே வருகின்றது புலிகள் இலங்கையில் முற்றாகத் துடைக்கப்படும் போது இவர்கள் புலம்பெயர் மக்கள் மீது பிரயோகித்த வன்முறைகளும் மிரட்டல்களும் நிச்சயம் இவர்களைத் திருப்பித்தாக்கும் “எவ்ரி எக்ஸன் ஹேஸ் என் ஈக்குவல் என்ட் ஒப்போசிட் ரி-அக்ஸன்”

புலிகளுக்கு இரண்டு இலச்சம் தீவிர ஆதரவாளர்கள் உண்டு என்று கொண்டால்கூட இவர்கள் வெளிநாடுகளில் மிகவும் சிறுபான்மையாக வாழ்வதால் இவர்களின் ஆதரவுத் தளம் எதையும் சாதிக்கப் பலமானதாக இல்லை என்பது திண்ணம். காரணம் வெளிநாட்டு அரசுகளின் பார்வையில் மொத்தமுள்ள பத்து இலச்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் வெறும் ஒரு இலட்சத்திற்கு சற்று அதிகமான மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிப்பதும் மற்றைய அனைவரும் மௌனியாய் இருப்பதால் வெளிநாட்டு அரசுகள் இவர்களின் போராட்டத்தின் ஏதார்த்த நிலையை உணர்ந்துள்ளது திண்ணமாகும்.

இதற்கு உதாரணமாக இரண்டு தினங்களுக்கு முதல் லன்டனில் வெளியாகும் டெயிலி
டெலிகிராபுக்கு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் வழங்கிய பேட்டியில் “பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் “டெவிட் மெலிபான்ட்” உற்பட்ட வெளிநாட்டு அமைச்சர்கள் அடிக்கடி தங்கள் நாட்டுக்கு விஜயம் செய்து தங்களின் நேரத்தை வீணடிப்பதாகவும் இப்போது அடிக்கடி வரும் இவர்கள் பிரபாகரன் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தும் போதும் மற்றும் பொதுமக்களை கொலை செய்யும்போது ஏன் இலங்கைக்கு வந்து புலிகளுக்கு அவற்றை மேற்கொள்ள வேண்டாம் என அழுத்தம் கொடுக்கவில்லை” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்தச் செய்தியை வெளியிட்ட அந்தப் பத்திரிகை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இத்தகைய ஒரு கண்டனத்தை இதற்கு முதலும் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது உள்ளாகியிருந்தார் எனவும் அவருக்கு நாடுகளுக்கிடையிலான நேசத்தை பேணத் தெரியவில்லை எனவுச் சுட்டிக்காட்டிருந்ததுடன் இவர் வெளிநாட்டமைச்சர் பதவிக்கு தகுதியானவா என்று கேள்வி எழுப்பும் தொனியில் அதன் செய்தி அமைந்திருந்தது.

இனி இலங்கையில் புலிகளின் ஆதரவுத் தளம் என்ன என்று நோக்குவோமாயின் இலங்கையின் மொத்த சனத்தொகைக் (இரண்டாயிரத்தி ஓராமாண்டு) கணக்கெடுப்பின்படி 21,128,772 பேர் மும்மதங்களையும் இரண்டு தேசிய மொழிகளையும் சார்ந்தவர்களாக வாழ்கின்றனர்.

இதில் 73.8% சிங்கள மக்களும், தமிழர் 18% தமிழர்களும் உள்ளனர் இந்த தமிழ் பேசும் மக்களில் 08% இலங்கைச்சோனகர்களும் (இஸ்லாமியர்கள்), இந்தியத் தமிழர்களும் 4.6%, இலங்கைத் தமிழர்களும் 3.9%, மற்றையவர்கள் 0.5% மும், வரையறைக்கு உற்படாதவர்கள் 10% (புலம்பெயர்ந்த மக்கள், வெளிநாட்டுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்கள்) முமாக காணப்பட்டனர்.

இதில் மொத்த தமிழர்கள் சுமார் பதினெட்டு வீதமாகும். இந்த பதினெட்டு வீதத் தமிழ் பேசுகின்ற மக்களில் இலங்கைச் சோனகர்கள் 08 வீதமானவர்களும் புலிகளை என்றும் ஆதரிக்காதவர்களாகும். காரணம் புலிகள் தொடர்ந்து முஸ்லீம்கள் மீது நடத்திய படுகொலைகளும் சொந்த ஊர்களை விட்டு விரட்டியதனாலும் முஸ்லீம் புத்திஜீவிகளை தொடர்ந்து பலி வாங்குவதாலும் இலங்கை முஸ்லீம்கள் சர்வாதிக்க வாதிகளான புலிகளை ஏற்க மறுத்துவருகின்றனர்.

இந்நிலையில் புலிகளாலும் புலிகளின் புலம்பெயர் அமைப்புக்களாலும் பல முயற்சிகள் தற்போது முஸ்லீம்களின் ஆதரவைப் பெற நடைபெறுகின்றபோதும் இனி எப்போதும் புலிகளை நம்பியவர்களாக அவர்களின் பின்னால் கைகோர்க்க எந்த இஸ்லாமியரும் தற்போது தயாராகயில்லை.

சில அரசியல் சக்திகள் அப்படிப் புலிகளுடனோ அல்லது அவர்களின் முகவர்களுடனோ கைகோர்க்க முற்பட்டாலும் அவர்கள் உடன் இஸ்லாமிய சமூகத்தினரால் தூக்கியெரியப்படுவர். இதற்கு பல வரலாற்றுச் சம்பங்கள் ஆதாரமாக உண்டு அவற்றை இந்த கட்டுரையின் விரிவு கருதி நான் உள்ளடக்கவில்லை.

ஆகவே மீதியுள்ள 10% வீதமான தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால் அதில் 4.6% வீதமாகவுள்ள இந்தியத் தமிழர்கள் எனப்படும் (இவர்களும் இலங்கைப் பிரஜைகள்) இலங்கை தோட்டத் தொழிலாளர் சமூகத்தினர் இவர்கள் முற்று முழுதாக புலிகளை ஆதரிப்பதுமில்லை எதிப்பதுமில்லை என்ற நடுநிலையை பேனும் மக்களாகும். இந்த சமூகத்தின் மத்தியில் புலிகளும் அவர்களின் செயற்பாட்டாளர்களும் பல செயற்திட்டங்களை முன்னெடுத்து அவர்களுக்கான தளங்களை இம்மக்களின் பிரதேசங்களில் அமைக்க முற்பட்டபோதும் அது புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை.

மிகவும் ஏழ்மையான நிலை தொடர்ந்து அவர்களை ஏமாற்றும் அரசியல் தலைமைத்துவங்கள் கல்வியறிவின்மை சரியான அடிப்படை கட்டமைப்புக்கள் இன்றி மிகவும் கஸ்டமான சூழலில் தங்களின் வாழ்கையை நடத்தும் இந்த மக்கள் புலிகளை ஆதரிப்பதன் மூலம் குடிக்கின்ற கஞ்சியையும் இழக்க விரும்பவில்லை.

புலிகளுக்கும் அவர்களின் விசுவாசிகளுக்கும் உலகம் முழுவதிலும் மற்றும் இந்தியாவிலும் பல போராட்டங்களை நடத்த முடிந்தபோதும் இலங்கையில் இந்த மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் ஒரு புலிகளுக்கு ஆதரவான கோஷத்தைக் கூட நடத்திக் காட்ட முடியவில்லை இதிலிருந்தே புலிகளுக்கான ஆதரவுத் தளம் இந்த மக்களிடம் நிச்சயமாக இதற்கு முதல் இருக்கவுமில்லை இனி ஏற்படுத்த வாய்ப்புமில்லை எனலாம்.

ஆகவே இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களில் மீதியுள்ள 5%மான மக்களே புலிகளை ஆதரிக்க வேண்டும் இதில் வடக்கில் கிழக்கில் வாழ்கின்ற மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் என பல பிரிவின்ர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் யாழ்பாணம் 15 பிரதேச செயலாளர் பிரவுகள் கிளிநோச்சி 04 பி.செ.பிரிவுகள் மன்னார் 05 பி.செ.பிரிவுகள் முள்ளைத்தீவு 05 பி.செ.பிரிவுகளிலுமாக தமிழர்கள் 1,277,567 பிரசைகளும் முஸ்லீம்கள் 20,583 பிரசைகளும் சிங்களவர்கள் 13,626 பிரசைகளும் இரண்டாயிரத்தி ஏழாமாண்டு கணக்கெடுப்பின்போது இனங்காணப்பட்டிருந்தனர்.

இக்கால கட்டத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்கள் வட மகாணத்தில் குறைவாக காணப்பட்டதற்கான காரணம் வடக்கிலிருந்த முஸ்லீம்களும் சிங்களவர்களும் வடக்கிலிருந்து புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டதாகும். 1981ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது வடக்கில் முஸ்லீம்கள் 4.51 வீதமும் சிங்களவர்கள் 2.82 வீதமும் காணப்பட்டிருந்தனர். இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாகவேண்டும் 1971ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி வடக்கில் வாழ்ந்த சிங்களவர்கள் 4.50 சதவீதமாகும்.

நான் 2007ம் ஆண்டறிக்கைப் படி புலிகளின் ஆதரவுத் தளத்தை நோக்கவோமாயின் வடக்கில் தமிழர்கள் 97.39 வீதமும் முஸ்லீம்கள் 1.57 வீதமும் சிங்கள மக்கள் 1.04 வீதமும் காணப்படுகின்றனர்.

இதில் தமிழ்களான 97.37 சதவீதமான 1,277,567 பேர்களாவர் இவர்கள் அனைவரும் புலிகளை ஆதரிக்கின்றனரா? என்று நோக்கின் நிச்சயம் அது இல்லை என்ற பதிலையே தரும் காரணம் இதில் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டவர்கள், பாமர மக்கள், யுத்தத்தால் அங்கவீனமானவர்கள் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்கள் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் புலிகளை வெறுக்கின்ற மாற்றுக் கருத்துள்ளவர்கள் என்று தனித்தனியே நாங்கள் பிரித்து நோக்குவோமாயின் புலிகளின் ஆதரவாளர்களும் விசுவாசிகளுமாக வட மகாண மக்களில் சுமார் 30% வீதமானவர்களையே இனங்காண முடியும்.

அதுவும் தற்போது வன்னியில் தமிழர்கள் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டதாலும் புலிகளின் பல முக்கிய பிரதிநிதிகள் மற்றும் மக்கள் அரசிடம் சரணடைந்து ஜனநாயகப் பாதையில் இணைந்து கொண்டதாலும் புலிகளின் ஆதரவுத் தளம் முற்றாச் சரிந்துள்ளது என்பதே உண்மை. இந்த 30% ஆதரவுத் தளத்தில் தற்போது புலிகளால் ஆகக் கூடியது சுமார் 05% வீதத்தையாயினும் தக்கவைத்துக் கொள்வது பெரும் சிரம்மாகவே புலிகளுக்கு உள்ளது

அடுத்து தமிழர்கள் அதிகமாக வாழும் கிழக்குப் பக்கம் செல்வோமாயின் அம்பாறையின் இருபது பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மட்டக்களப்பின் பதிநாலு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் திருகோணமலையின் பதினொரு பிரதேச் செயலாளர் பிரிவுகளிலும் சேர்த்து தமிழர்கள் 589,441 பேர்களும் முஸ்லீம்கள் 549,286 பேர்களும் சிங்களவர்கள் 316,101 பேர்களும் பரங்கியர்கள் 4,308 பேர்களும் இந்தியத் தமிழர்கள் 691 பேர்களும் மலேயர்கள் 571 பேர்களும் ஏனையவர்கள் 541 பேர்களும் வாழ்கின்றனர்.

அதாவது தமிழர்கள் 40.39 சதவீதமும் முஸ்லீம்கள் 37.64 சதவீதமும் சிங்கள மக்கள் 21.64 சதவீதமும் ஏனையவர்கள் 0.33 வீதமும் கிழக்கில் வாழ்ந்துவருகின்றனர். இதில் புலிகளின் ஆதரவாளர்கள் எத்தனைபேர் என நோக்கின் இதிலுள்ள தமிழர் என்ற 40.39 சதவீத மக்களில் சாதாரண பாமர மக்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள் புலிகளின் பெரு பலமாக இருந்த கிழக்கின் தலைவர் கருணா அம்மானின் ஆதரவாளர்கள் அரசியல் வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்கள் புலிகளுக்கு எதிர் கருத்தாளர்கள் என்கின்ற அனைவரையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் கிழக்கில் புலிகள் மீது பரிதாபப் படுபவர்கள் என்ற தோரணையில் ஒரு 05 சதவீதத்தை எடுக்கலாம். காரணம் கிழக்கின் பெரும்பாலான தமிழர்கள் கருணா அம்மான் அவர்களின் பிரிவுடனும் வடக்கான் கிழக்கான் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப் பட்டதாலும் தாங்கள் எதிலும் சம்பந்தப் படாமல் ஜனநாய முறையை நேசித்து அமைதியாக வாழவே நினைக்கின்றனர் இதற்கு யுத்தம் இவர்கள் வாழ்கையை முடக்கிப்போட்டதும் ஒரு காரணம் எனலாம்.

ஆகவே வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று இலங்கையில் எந்தப் பகுதியிலும் இந்தியா மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என்று உலகின் எந்தப் பகுதியை நோக்கினாலும் புலிகளின் விசுவாசிகள் அல்லது ஆதரவாளர்கள் என அவர்களின் புலம்பெயர் ஆதரவாளர்களையே இனம்காண முடிகிறது. இவர்களும் புலம்பெயர் மக்களின் மொத்த குரல் என்று கூற முடியாது காரணம் எந்த நாட்டில் ஆர்பாட்டமோ அல்லது கவனயீர்ப்போ நடந்தாலும் அதே முகங்களும் அதே கூச்சலையும் காணப்படுவதால் புலிகளின் மொத்த ஆதரவாளர்கள் இலங்கைத் தமிழரில் சுமார் 05% மானவர்கள் என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.

ஆகவே மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் என்பதெல்லாம் இந்தச் சில்லரைகளின் கேஷமும் கூப்பாடும் மட்டுமேயாகும். இலங்கை வாழ்தமிழர்களில் மீதி 95 சதவீதமானவர்களும் ஜனநாயக முறையிலான ஆட்சிமுறையினையே ஆதரிக்கின்றனர். புலிகளுக்கு மேற்கத்தைய நாடுகளிலும் இலங்கையிலும் தமிழ் ஊடகங்கள் பணத்திற்காக துணைபோவதால் உலகத் தமிழ்கள் அனைவரும் புலிகளை ஆதரிப்பதுபோன்ற ஒரு பிரமையை அவைகளினூடாக ஏற்படுத்தி தமிழர்களை அடிமைகளாக்க புலிகளின் பிணாமிகள் முயற்ச்சிக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக இலங்கையின் தேசிய நாளேடான வீரகேசரியை குறிப்பிடலாம் இந்த தேசிய பழம்பெரும் நாளேடானது செய்தியாளர்கள் நிருபர்கள் “புலிகள்” என்று குறிப்பிட்டு அனுப்புகின்ற செய்திகளை கூட “இனந்தெரியாதவர்கள் அல்லது முரண்பாட்டாளர்கள்” என மாற்றிப் பிரசுரம் செய்கின்றது. இது பத்திரிகை தர்மத்திற்கு அப்பாட்பட்ட செயலாகும். இதற்கு ஆதாரமான இராணுவ இணையத்தளமாக army.lk புலிகளின் பணத்தினால் சர்வதேச இணைத்தள நரிகளால் சில நிமிடங்கள் தடைசெய்யப்பட்டது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் கூறிய செய்தியை வீரகேசரி எப்படி தமிழாக்கியுள்ளது என்பதை நீங்கள் படித்துப் பார்ப்பதனூடாக புரிந்து கொள்ளலாம்.

சர்வதேச நாடுகள் எல்லாம் தங்கள் நிலைமீறி இலங்கை விடயத்துக்குள் மூக்கை நுழைக்கும் போது பயப்படாமல் அதை கண்டிக்கும் இலங்கையின் தற்போதைய அரசு ஏன் இந்த பத்திரிகைமீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்று புரியவில்லை.

இவ்வாறு புலம்பெயர் மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தில் இயங்கும் மேற்கத்தைய ஊடகங்களிலும் புலிகளின் தீவிர புலம்பெயர் விசுவாசிகளிடமும்தான் புலிகளின் ஆதரவுத்தளம் தற்போது உயிர் வாழ்கிறது எனவே இனிமேலாவது ‘மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள்” என்ற கோஷத்தை விடுத்து “புலிகள்தான் நாங்கள் நாங்கள்தான் புலிகள்” என்ற கோஷத்தை முயற்சியுங்கள் முயற்சி திருவினையாக்கும்.

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் – ஞானம்மா
தெரியாதே அலைவாரே
முத்தி பெறுவதற்கும் முதலாம் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு – ஞானம்மா
நினைவோடு இருக்கணூமே!


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com