த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சிஐடி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு தங்கியிருந்து, கடந்த வாரம் அங்கிருந்து வெளியேறிய மக்களுடன் மக்களாக வந்து வவுனியா செட்டிக்குளம் முகாமில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரத்தினம் மேலதிக விசாரணைக்காக வியாழக்கிழமை காலை கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த காலத்தில் அங்கு இடம் பெற்ற விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரியவருகிறது.
அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் வவுனியா செட்டிக்குளம் முகாமிலேயே தங்கியுள்ளனர்.
0 comments :
Post a Comment