Sunday, May 10, 2009

பிரித்தானிய ஊடவியலாளர்கள் நாடு கடத்தப் பட்டனர்.

இலங்கைப் பொலீஸ் திருகோணமலையில் வைத்து பிரித்தானிய 4 வது கனால் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கைது.

Nick Paton-Walsh, Bessie Du, மற்றும் ஒளிபடைப்படைப்பாளர் Matt Jasper கைது செய்யப் பட்டவர்களாவர். இந்த ஊடகம் இலங்கை அரசபடைகளுக்கும் புலிப்பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற உக்கிர யுத்தத்தைப் படம் பிடித்து ஒளிபரப்புபவர்களாகும். அண்மையில் இவ்வூடகம் அகதிமுகாங்களில் பாலியில் பலாத்காரம் நிகழ்ந்ததாகவும் பல மரணங்கள் நடந்ததாகவும் புலிபிடியிலிருந்து தப்பிவந்த தமிழர்களை அரசாங்கம் தகுந்த முறையில் பராமரிப்பதில்லையென்றும் ஊர்யிதப்படுத்த முடியாத உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஒளிபரப்பியதாலேயே இக்கைது நடைபெற்றது என்று ஊகிக்கப் படுகிறது. 4 வது கனாலை வெளியிடும் ITN செய்தி நிறுவனம் இந்த ஊடகவியலாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேறும்படி பர்துகாப்பு அமைச்சால் கட்டளையிடப்பட்டதாகக் கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் மேற்கு நாட்டு ஊடகங்களால் வன்மையாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்து. எப்பொழுதுமே ஒரு யுத்தத்தில் உண்மைகளே முதலில் பலியாவதும் பொய்மைகளே ஒய்யாரமாக உலகை வலம்வருவதுமே வழக்கமாகும். இன்றும் ஜேர்மனியும் பிரான்சும் சேர்ந்து நடாத்தும் யுசுவுநு தொலைக்காட்சி நேற்று மட்டும் 2000 தமிழர்களை இலங்கைப் படைகள் கொன்றுள்ளதாகச் தொடர்ந்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com