Sunday, May 3, 2009

உணர்ச்சிவசப் படுத்தக்கூடிய செய்திகளைக் கசியவிட்டதையிட்டு ஐநா விடம் விளக்கம் கோரும் இலங்கை அரசு.



ஐநா உணர்ச்சிவசப் பட வைக்கும் இலங்கையின் உள்நாட்டு ஆவணங்களையும் செய்மதிப் படங்களையும் கசிய விட்டதை எதிர்த்து இலங்கை அரசாங்கம் ஒரு பாரபட்சமற்ற விசாரணையைக் கோருகிறது. இந்தச் செய்திகள் வெளியான மறுகணமே இலங்கையில் வதியும் ஐநா இணைப்புப் பிரதிநிதியான திரு. Neil Buhne அழைக்கப்பட்டு அதிபற்றி விளக்கமளிக்கம்படி வேண்டப் பட்டார்.

"ஐநா இலங்கையின் உள்நாட்டு விடயங்கள்பற்றிய உணர்ச்சிவசப் படுத்தும் செய்திகளையும் ஆவணங்களையும் கசிய விட்டது இதுதான் முதற்தடவையல்ல. இருந்தபோதும் இதுபற்றிய உண்மைகளை வெளிக் கொணர வேண்டிய காலம் கனிந்துவிட்டது" என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

இலங்கை ஆயுதப்படைகளை அபகீர்த்தியடைய வைக்கும் நோக்குடனேயே இவை வெளிப்படுத்தப் பட்டன. இலங்கை இராணுவம் கட்டுப்பாடும் தனது தேடும் நடவடிக்கைகளில் ஜாக்கிரதையும் உடையது. இந்த இக்கட்டான வரலாறு மாறும் காலங்களில் இச்செயல்கள் அவர்களது கீர்த்தியை மங்க வைப்பது மாத்திரமல்ல அவர்களது மனஉறுதியையும் நிர்ணயத்தையும் பலவீனப்படுத்தக் கூடியதுமாகும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com