இடைத்தங்கல் முகாம்களின் நலன்களைக் பேணுமுகமாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் குழு நியமனம்.
புலிகளின் ஒட்டுக்குழுவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் நலனில் நின்று தமிழ் மக்களுக்கு சேவைபுரிய மறுக்கின்றது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான ஒன்று கூடல் இடம்பெற்றது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டினுள் வந்துள்ள மக்களின் நலன்களைப் பேணுவது தொடர்பாக இடம்பெற்ற இவ் ஒன்றுகூடலின்போது இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நலன்களைப் பேண அனைத்து தமிழ் கட்சிகளதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இக்குழுவானது இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களது நலன்கள் தொடர்பான வேலைத் திட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும். வேலைத் திட்டங்களை துரிதப்படுத்தும் பொருட்டு குழு குறைந்தது வாரம் ஒரு முறை கூடுவது என தீர்மானிக்கப்டுள்ளது.
இக்கூட்டத்தில் TULF தலைவர் திரு. ஆனந்தசங்கரி, PLOTE தலைவர் திரு. சித்தார்த்தன், EPDP தலைவர் டக்ளஸ் தேவானந்தா, EPRLF தலைவர் சிறிதரன், CWC திரு. முத்துசிவலிங்கம், UPF திரு. ராதாகிருஸ்ணன், TMVP திரு. சந்திரகாந்தன், ஆகியோருடன் அமைச்சர்ளான நிமால் சிறிபால டீ சில்வா, மஹிந்த சமரசிங்க, டீவ் குணசேகர, விஷ்வ வர்ணபால, முரளிதரன் , பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இவ் ஒன்று கூடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அதற்கு சமூகம் கொடுக்க வில்லை. இதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் நலனில் நின்று மக்களுக்கு ஆற்றக்கூடிய சேவைகளைப் புறக்கணித்தது வருகின்றமை தெளிவாகியுள்ளது.
0 comments :
Post a Comment