புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிஸ்டல் குழு தலைவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி
மட்டக்களப்பு எறாவூர் பிரதேசத்தில் புலி உறுப்பினரொருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இன்று நண்பகல் கொல்லப்பட்டுள்ளார். கீர்த்தி எனப்படும் களுவாஞ்சிக்குடியை சேர்ந்த ஐயாத்துரை கணேசமுர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ள இவர் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிஸ்டல் குமு தலைவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட இந்நபர் கொடுத்த தகவல்களின் படி பெருந்தொகையான ஆயுதங்கள் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் இவர் புதைத்து வைத்திருந்த ஆயுதங்களை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுங்களை எடுத்து தாக்கமுற்பட்டவேளை மேற்கொண்ட பதில் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment