ஐ.சி.ஆர்.சி யின் சேவை இடைநிறுத்தம்.
வன்னியில் யுத்த சூனியப்பிரதேசத்தில் சிக்கி உள்ள மக்களை வெளியேற்றும் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அங்கு இடம்பெற்று வரும் உக்கிர யுத்தம் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக ஐசிஆர்சி பேச்சாளர் சரசி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஐசிஆர்சி யினர் கிறீன் ஒசியன் எனும் கப்பல் மூலம் யுத்த சூனியப் பிரதேசத்தில் உள்ள காயமடைந்த மற்றும் நோயாளர்கள் திருமலைக்கு கொண்டுவரும் சேவையில் ஈடுபட்டிருந்தனர் என்பது அறிந்த விடயம்.
0 comments :
Post a Comment