கே.பி யை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புலிகளியக்கத்தின் சர்வதேச தொடர்பாளரான கே.பி எனப்படும் சண்முகம் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்காக இலங்கை அரசு பலநாடுகளைத் தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகதுறை மாநாட்டில் ஊடகதுறை அமைச்சர் பிரியதர்சன யாப்பா கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதுடன் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவிறாந்து உள்ளது எனவே குற்றவாளிகளை கைமாற்றும் அடிப்படையில் அவர் தொடர்பாக நடவடீக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் சர்வதேச நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நாடுகளோடு போச்சுவார்த்தை நடாத்தப்படும் என தெரிவித்த அவர் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. அது வளர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது, சர்வதேச நாடுகளில் புலிகள் அமைப்பிற்கு உதவும் வகையில் நிதி திரட்டுதல், புலிகள் அமைப்பிற்கு நிதி வழங்குதல் போன்ற நடவடீக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக குறித்து இலங்கை துதரகத்தினால் குறித்த நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் சட்ட நடவடீக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகதுறை அமைச்சர் பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment