Saturday, May 16, 2009

தற்கொலைக்குத் தயாராகும் பிரபாகரனும் சகாக்களும் - விருகோதரன்

வன்னி மீட்பு நடவடிக்கை படையினரால் ஆரம்பிக்கப்பட்டபோது படையினருடைய பலத்தையும் தமது பலவீனங்களையும் புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோதிலும் மக்கள் இவ்யுத்தத்தில் சந்திக்கப்போகின்ற இழப்புக்களை உதாசீனப்படுத்தி தொடர்ந்தும் போரில் நாட்டம் கொண்டிருந்தநிலையில் இன்று சிறு மைதானம் அளவு பிரதேசத்தில் முடங்கியுள்ளனர்.

இவ் யுத்தத்தில் இத்தனை உயிர்களைப் பலி கொடுத்த புலிகள் இன்று தற்கொலை செய்து கொள்வதற்காக மணி நேரங்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். புலிகள் இன்று மேற்கொள்ள திட்டமிடும் தற்கொலை முயற்சி எம் தேசத்திற்கு பாரிய வடு ஒன்றை விட்டுச் செல்லப்போகின்றது.

பிரபாகரனது இருப்பிற்காக தமிழினத்திற்கு அவலங்களையே பாக்கியாக்கியுள்ள புலிகளியக்கம் தற்கொலை செய்து கொள்ளும் போது பலிகொடுக்கப்பட இருக்கும் அப்பாவி புலி உறுப்பினர்களின் நிலை பற்றி சிந்தப்பதற்கு தன்னும் புலம்பெயர்தேசத்துத் தமிழ்ச் சமூகம் முற்படாமல் தொடர்ந்தும் பிரபாகரன் எனும் உலக பயங்கரவாதியை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். வன்னியில் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி புலிகள் வன்முறைகளை கைவிடுவதாக உறுதியளித்து பேச்சுவார்த்தைக்கு திருப்பவேண்டும் அன்றேல் படைநடவடிக்கை மூலம் வன்னி கைப்பற்றப்படும் என பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அச்செய்தியை புலிகள் உதாசினம் செய்தபோது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் கடந்த கார்த்திகை மாதம் மாவீரர்தின உரையாற்றிய புலிகளின் தலைவர் மஹிந்த கிளிநொச்சியை கைபற்றுவதாக கனவு காண்கின்றார் என்றார். அவர் அதைக் கூறி இரு மாதங்களில் கிளிநொச்சியில் படையினர் சிங்கக்கொடி ஏற்றினர்.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவித்த ஜனாதிபதி புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையவேண்டும் என தெரிவித்தார். புலிகள் இணங்க வில்ல. தொடர்ந்தும் பல அவகாசங்கள் புலிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவற்றை ஏற்கவில்லை பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் கூடவே பொதுமக்களையும் யுத்தத்தில் பலி கொடுத்தனர்.

இன்று கள நிலைமகளை தொலைநோக்கி இல்லாமல் அவதானிக்க கூடிய அளவிற்கு புலிகளின் நடமாட்டம் கண்ணுக்கு எட்டிய தூரத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களை சரணடையுமாறு வன்னியெங்கும் ஒலிபரப்பி மூலம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற நிலையில் புலிகள் தொடர்ந்தும் ஒரு தொகுதி மக்களை மனிதகேடயங்களாக தடுத்து வைத்துள்ளதுடன் எந்த விதமானதோர் இலக்கும் இல்லாமல் மக்களையும் அப்பாவிகளான அவ்வியக்க உறுப்பினர்களையும் பலி கொடுகின்றனர்.

இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்த முடிவிற்கு மணித்தியாலயங்கள் எண்ணப்படுகின்ற நிலையில் பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளபோவதாக தெரிவயவருகின்றது. இது ஓர் சாதாரண விடயம் அல்ல புலிகளின் தலைவர் நியாயமானதோர் போராட்டத்தை நாடாத்தியிருந்தால் அப்போராட்டம் அங்கிகரிக்கப்பட்டதொன்றாக கருதப்படுமானல் ஏன் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இவர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் தொடர்ந்தும் தமிழினத்திற்கு விட்டுச் செல்ல இருக்கின்ற எச்சங்கள் என்ன என்பது பாரியதோர் விடயம்.

இன்று விலைமதிப்பற்ற உயிர்களை பலி கொடுத்து இலங்கையின் பொருளாதாரத்தையும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை தொலைத்து 30 வருட காலம் மக்களின் பணத்தில் சுகபோகம் நாடாத்தி வந்து பிரபாகரன் இறுதியாக தற்கொலை செய்து கொள்ளும்போது ஆயிரக்கணக்கான புலி உறுப்பிர்களையும் மக்களையும் தன்னுடன் சேர்த்து கொலை செய்ய முயற்சிப்பதன் நோக்கம் யாது? தனது மரணத்தின் பின்பு அங்கு மறக்க முடியாததோர் நிகழ்வு இருக்க வேண்டும், தனது பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக இவ் உயிர்களை பலிகொடுக்க முயற்சிக்கின்றார்.

இவர் ஓர் உண்மையான விடுதலைப் போராளியாக இருந்தால் இவரது போராட்டம் முன்னெக்கப்பட்ட விதத்தில் நியாயம் தர்மம் இருந்திருந்தால் இன்று எஞ்சியுள்ள இந்த சில மணி நேரங்களிலாவது அங்குள்ள மக்களையும் எஞ்சியுள்ள போராளிகளையும் விடுவிக்க வேண்டும்.

களத்தில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் படி புலிகள் தம்மிடம் உள்ள சகல ஆயுத மற்றும் வெடி மருந்து களஞ்சியங்களையும் புலிகளின் தளபதிகளின் காரியாலயங்கள் மற்றும் தமது பிரதான தடயங்களையும் அழித்து வருவதாக தெரியவருகின்றது. இந்த அழிப்பு நடவடிக்கையால் வன்னி பிரதேசம் ஓர் நெருப்பு குவளையாமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகின்றது.

பொறுத்திருப்போம் இன்னும் சில மணித்தியாலயங்கள்.

No comments:

Post a Comment