Thursday, May 7, 2009

பிரித்தானியாவுக்கான சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மூவர் கைது.


புலிக்கொடிகளைத் தாங்கிச் சென்ற 150 க்கு மேற்பட்ட புலி ஆதரவாளர்களால் நேற்று பிரித்தானியாவுக்கான சீனத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலில் தூதரகத்தின் கண்ணாடி யன்னல்கள் யாவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் கட்டடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தூதரகங்கள் மீது புலி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். புலிகள் இயக்கம் பிரித்தானியாவில் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும். இந்நிலையில் பிற தமிழர் அமைப்புக்களின் பெயரில் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களுக்கு அனுமதியைப் பெறும் புலிகள் அங்கு சட்டத்தையும் ஓழுங்கையும் மீறிச் செயல்பட்டு வருகின்றனர்.

நேற்றைய சம்பவத்தில் ஒருவர் பயங்கர அழிவுகளை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், ஒருவர் பயங்கர அழிவுகளை ஏற்படுத்த முயற்சித்த குற்றத்திற்காகவும், ஒருவர் பொலிஸார் ஒருவரைக் காயப்படுத்த முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக மெற்றோபொலிற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment