வாகரையில் இராணுவ முகாமில் மூன்று புலிகள் சரண்
மட்டக்களப்பு வாகரை இராணுவ முகாமில் எல். ரீ. ரீ. ஈ. இயக்க உறுப்பினர்கள் மூன்று பேர் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். வாழைச்சேனை கொண்டையங்கேணி யைச் சேர்ந்த புகழேந்தி என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை அமரசிங்கம், வாகனேரியைச் சேர்ந்த ஹரன் என்றழைக்கப்படும் பரமக்குட்டி சாமுவேல், முள்ளிவட்டவானைச் சேர்ந்த ராகுலன் என்றழைக்கப்படும் செல்லப்பா சிவாநந்தன் ஆகியோரே சரணடைந்துள்ளவர்களாவர்.
இவர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள்- 3, கைக்குண்டுகள் -03, கிளேமோர் குண்டு-1, டெட்டனேட்டர்கள்-3 ஆகிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்துள்ளனர். வாகரை- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப் பினர் இவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெரிவிக்கப் படுகிறது.
0 comments :
Post a Comment