Friday, May 29, 2009

எமக்கு நாமே உதவுவோம். அழகலிங்கம் ஜேர்மனி

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்க்கு உதவுமுகமாக இலங்கை வங்கி(Bank of Ceylon) வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகளை இலவசமாகத் திறப்பதற்கு உறுதி அளித்துள்ளது. இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அவர்களது நண்பர்களும் உறவினர்களும் நேரடியாகவே தங்களது வங்கிகள் மூலம் உதவி நிதிகளை நேரடியாக அனுப்பி உதவலாம்.

ஜேர்மனியிலுள்ளவர்களுக்கு இது மேலும் இலகுவாகும். ஜேர்மனியிலுள்ள (Commerce Bank) கோமேர்ஸ்பாங்க் கிளைகளில் இலங்கை வங்கியின் கிளைகள் இப்பொழுது இய்ங்குகின்றன. ஜேர்மனியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளில் கணக்குகளைத் திறந்தவர்கள் கணணிகள் மூலமாமாக இந்தப் பணங்களை அனுப்பலாம். (இலங்கை வங்கியில் தமது நிதியைச் சேகரிக்க விரும்புபவர்களும் எந்தவித சிரமமும் இன்றி இதன் மூலம் சேமிக்கலாம்). ஏற்கனவே ஜேர்மன் பிறாங்போர்டில் இலங்கை வங்கியின் கிளையொன்று திறக்கப் பட்டுள்ளது.
இந்த வங்கிமுறை அடுத்த மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த முறை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்கள் தேவைப் படுபவர்களுக்கு ஜேர்மன் பிறாங்போர்டில் உள்ள இலங்கை ஜெனறல் கவுன்ஸ்சலர் உதவத் தயாராக உள்ளார். அவர்களது தொடர்பு விபரம்:-

BUDDHI ATHAUDA MBA
Counul General of Sril Lanka
Federal Repulic of Germany
Frankfurt.
Telephone:-0049-69-660539822
0049-69-660539812

இந்த மக்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவினர்களும் நண்பர்களும் அகதிகளின் நலன் விரும்புபவர்களும் இந்தத் துன்பம் சூழ்ந்த நாட்களில் உதவுவது பெரிய ஆறுதலை அளிக்கும். நீங்கள் அனுப்பும பணம் மட்டும் அவர்களுக்குப் போதப் போவதில்லை. அதனோடு சேர்த்து அந்த மக்களுக்குப் பெரியதொரு எதிர்கால நம்பிக்கையும் சேர்த்தே அனுப்பலாம். அந்த அப்பாவித் தமிழர்களுக்கும் தங்களது நலனில் அக்கறையுள்ளவர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள் என்றதொரு தெம்பைக் கொடுக்கும். அதனோடு சேர்த்து அரசாங்கத்திற்கும் இவர்களது நலனில் அக்கறை உள்ளவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்ற செய்தியையும் அது தெரிவிக்கும்.

ஏற்கனவே அரசாங்கம் இவர்களுக்குத் தம்மால் ஆன உதவிகளைச் செய்கிறது. சீரோடு வாழ்ந்து வேரோடு சாய்ந்த அந்த மக்களுக்கு தொட்டகுறை விட்டகுறைகளை இவை இடை நிரப்பும். யுத்தத்தால் 200 பில்லியன் டொலரளவில் சேதப்பட்டுக் கடனுக்குமேல் கடன் சுமை ஏறி கல்லுக்கு மேல் கல் இல்லாமல் இருக்கும் ஒரு நாட்டின் அரசாங்கத்தின் உதவி செய்யும் ஆற்றல் எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகிப்பது சுலபமாகும்.

தமக்குத் தாமே உதவி செய்யாதவர்களுக்கு மற்றவர்களது உதவி ஏதும் பெரிதாகச் சித்தயாது என்ற பழமொழிக் கேற்ப எம்மவர்க்கு நாமே உதவுவது எமது கடமையாகும். இன்று அவர்களுக்குச் செய்யும் சின்ன உதவிக்கு நிகராக எதிர்காலத்தில் கோடி கொடுத்தாலும் ஈடாகாது. இந்த வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு ஒத்திபோடாது உதவும்படி வேண்டுகின்றோம்.

உங்களது சொந்த பந்துக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அறியாதவர்களும் இலங்கை வங்கியின் கணக்கு இலக்க ஆவணங்களிலிருந்து அவர்களது உறவுகளைத் தேடவும் இம்முறை வழிவகுக்கும்.


No comments:

Post a Comment