வவுனியாவில் வெடிபொருட்கள் , ஆயுதங்கள் மீட்பு.
வவுனியா ஆசிக்குளம் பிரதேசத்தில் தேடுதலில் ஈடுபட்ட 21ம் படையணியினர் சந்தேசத்திற்கு இடமான குழுவொன்றை சந்தித்தபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அங்கு இடம்பெற்ற சில நிமிட நேர துப்பாக்கிச் சண்டையை அடுத்து படையினர் அப்பிரதேசத்தில் அக்குழுவினரால் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரி-81 ரக துப்பாக்கி ஒன்றுடன் அதற்கு தேவையான ரவைகளையும் கண்டெடுத்துள்ளனர்.
மேலும் ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பண்டாரிக்குளம் பிரதேசத்தில் இரு புலிச் சந்தேக நபர்களைக் கைது செய்த படையினர் அவர்களிடமிருந்து 7 கிலோகிராம் சி4 ரக வெடிமருந்து மற்றும் ஒருதொகை இரும்புச் சன்னங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment