லண்டனில் மக்களிடம் பெற்ற பணத்தை வைத்துக்கொள்ள முடியாமல் திருப்பிக்கொடுக்கும் புலிகள்.
புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது புலம் பெயர் வலையமைப்பு இலங்கை அரசினால் இலக்கு வைக்கப்படுகின்றது. சர்வதேச நாடுகளில் உள்ள புலிகளின் செயற்பாடுகள் மற்றும் சொத்துக்களை முடக்க இலங்கை அரசு சம்பந்தப்பட்ட நாடுகளை தொடர்பு கொண்டு வருகின்றது. இதை அறிந்த புலிகள் தாம் மக்களிடம் இருந்து பெற்ற பணங்களை திருப்பி கொடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.
லண்டனில் வங்கிக்கணக்குகளை பேணுவதில் உள்ள சட்டச் சிக்கலைகளை எதிர்கொள்ளும் பொருட்டே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவருகின்றது. புலிகள் தம்மிடம் உள்ள பணத்தை தமது நெருங்கிய மற்றும் விசுவாசமானவர்களின் வங்கிகளில் வைப்பிலிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
புலம்பெயர் தேசத்திலே புலிகளுக்கு மாதாந்தம் பணம் கொடுத்து வந்த பலர் தமது வங்கிக்கணக்குகளில் இருந்து புலிகளின் வங்கிக்கணக்குகளுக்கு மாதாந்த கொடுப்பனவுக்கான அனுமதியை வழங்கியிருந்தனர். அவ்வாறு மிகவும் பொறுப்புடனும் விசுவாசத்துடனும் செயற்பட்டவர்களது வங்கிக்கணக்குகளிலேயே புலிகள் தமது பணத்தை பதுக்குவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு புலிகளின் பணம் தனது வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதை லண்டனுக்கான இலங்கைநெற் நிருபருக்கு நபரொருவர் தெரியப்படுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment