இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை தடைசெய்வதற்காக இலங்கையினால் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க கூடாது என சி.பி.ஐ கட்சி தேசிய செயலாளர் டீ.ராஜா வலியுறுத்தியள்ளார். அவர் மேலும் கூறுகையில்
இலங்கையில் மனிதஉரிமைகள் மீறல் தொடர்பாகவும், போர்குற்றங்கள் தொடர்பாகவும் ஆராய பட வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்துகின்ற நிலையில் இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற இத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்குமாக இருந்தால் அது தமிழர் நலனை கைவிடுவதற்கு இணையாகும். அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து சம்பவங்களுக்கும் இந்தியாவே காரணம் எனவும் தொரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment