Saturday, May 9, 2009

இலங்கைத் தமிழர்களின் அமைதியான வாழ்க்கைக்குத் தேவையான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது: மன்மோகன்



சென்னை, மே 9: இலங்கைத் தமிழர்களின் அமைதியான, மரியாதையான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு அமைதியான, மரியாதையான வாழ்க்கை கிடைக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது, தொடர்ந்து மேற்கொள்ளும்.

சர்வதேசச் சட்டங்களின்படி, இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக அங்கு படையை அனுப்புவது அவ்வளவு எளிதல்ல. இதைப் பற்றிப் பேசுபவர்களுக்கும் இது தெரியும்.

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது, அவர்களுக்குச் சில உபகரணங்களும் வழங்கப்பட்டன. ஆனால் இவை யாவும் இலங்கையின் தற்காப்பிற்காகவேயன்றித் தாக்குதல் நடத்துவதற்காக அல்ல.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நன்றி தினமணி

No comments:

Post a Comment